இன்று வரை உலகளவில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், உலக நாடுகளில் முதலாவதாக சீனா- கொரோனா அச்சுறுத்தலை முறியடித்து உள்ளதாக அதிகாரப்பாட்டுத் தகவல் வெளியிட்டுள்ளது. 07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் உகான் நகரில் தோன்றி, கடந்த மூன்று மாதங்களில் உலகம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. இதனால் உலக அளவில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது. சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34 பேருக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதேபோன்று கூபெய் மாகாணத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் புதிய பாதிப்பு எதுவும் கூபெய் மாகாணத்தில் இல்லை என அந்நாட்டின் தேசிய நலங்குத்துறை ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளனர். சீனாவை தவிர்த்து, இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. எனினும், சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என அந்நாட்டு அரசு தொடர்ந்து கூறி வந்தது. இந்த நிலையில், சீனாவின் கூபெய் மாகாணத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்த மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும், கடந்த செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு மட்டும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. எனினும், இன்று வரை உலகளவில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், உலக நாடுகளில் முதலாவதாக சீனா- கொரோனா அச்சுறுத்தலை முறியடித்து உள்ளது. இந்தியா வெற்றிகரமாக இன்று நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியிருக்கிறது. இதே நாளில் சீனா கொரோனாவை முறியடித்துள்ளதாக அதிகாரப்பாட்டுத் தகவல் வெளியிட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



