தூக்கிலிடப்பட்டனர்! இன்று காலை 5.30மணிக்கு காமுகர்கள் முகேஷ் சிங், அக்ஷய் தாக்கூர், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய நான்கு பேரும். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றத்திற்காக. 07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான்கு காமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த 7ஆண்டுகளுக்கும் மேலாக பற்பல திருப்பங்களோடு முன்னெடுக்கப்பட்டு வந்தது. இறுதியாக இன்று காலை 5.30மணிக்கு காமுகர்கள் முகேஷ் சிங், அக்ஷய் தாக்கூர், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய நான்கு பேரும்ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். இந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. திகார் சிறை சிறை அதிகாரிகள் புதன்கிழமை மரண தண்டனையை பொம்மைகளை வைத்து ஒத்திகை செய்து பார்த்தனர். தூக்கு மேடையில் கட்டப்பட்ட கயிறு பீகார், பக்சர் சிறைச்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 10 கயிறுகள் பக்சர் சிறையிலிருந்து டெல்லி திஹார் சிறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. மீரட்டில் வசிக்கும் பவன் ஜல்லத் உத்தரபிரதேச சிறைச்சாலைத் துறை பணியாளர். மரணதண்டனை நிறைவேற்ற, திகார் சிறை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார். பவனுக்கு ஒரு தூக்குக்கு ரூ .15 ஆயிரம் ஊதியமாக, வழங்கப்படுகிறது. திகார் உள்ளே ஒரே நேரத்தில் நான்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம், பவன் ஜல்லத், ரூ.60,000 ஊதியம் பெற உள்ளார். பவனுடன், சிறை கண்காணிப்பாளர் மற்றும் சிறை மருத்துவர் போன்ற ஒரு சில அதிகாரிகள் மட்டுமே காலை சம்பவ இடத்தில் இருந்தனர். கடைசியாக திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டவர் அப்சல் குரு. நாளது 27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5114 (09.02.2013) அன்று திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குரு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இந்த தூக்கு தண்டனை நிறைவேறியிருந்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



