விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை, இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. 07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி தமிழீழப் பகுதிகளில், காவல்துறை, வங்கி என்று தனியாட்சி நடத்திவந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்து அரசு கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது. இங்கிலாந்து பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பட்டியலில் அதை சேர்த்திருந்தது. ஆனால் கடந்த பதினோரு ஆண்டுகளுக்கு முன் நடந்த நான்காவது ஈழப்போருக்குப்பின் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் நின்று போயிருப்பதால், அதன் மீதான தடையை நீக்க வேண்டுமென்று விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கம் ஒன்று கோரிக்கை விடுத்தது. இதை கடந்த ஆண்டு இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. இதைத்தொடர்ந்து அந்த அமைப்பு சார்பில் இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையத்தில் (பி.ஓ.ஏ.சி.) மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம்- விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி முந்தாநாள் உத்தரவிட்டது. இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, இலங்கை அரசு மேல்முறையீட்டுக்கு அந்த ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால் இந்த ஆணையத்தின் நடவடிக்கையில் இலங்கை ஒரு தரப்பாக இல்லை. அதைப்போல நேரடி பிரதிநிதிகளையும் ஏற்படுத்த முடியாது என்ற நிலையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்த தக்கது. இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசே பதவியேற்றிருக்கிற நிலையில், இந்தத் தடை நீக்கத்திற்கு அவர்களால் பாதிப்பு ஏற்படுத்த இயலாமல் போனால், இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது இருக்கிற பாதுகாப்பற்ற தன்மையில் மாற்றம் ஏற்படலாம் என்று கருதப்படுகின்றது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.