Show all

150000 பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலக அளவில் பால் பண்ணை தொழிலில் நியூசிலாந்து முக்கிய இடம் வகித்து வருகிறது. அங்கு ஏராளமான பால் பண்ணைகள் உள்ளன. இங்கு 10 லட்சம் மாடுகள் உள்ளன. பால் பொருட்கள் ஏற்றுமதியின் மூலம் அந்நாடு குறிப்பிடத்தக்க அளவு வருவாய் ஈட்டி வருகிறது. அதிக பால் தரும் வீரிய ரக மாடுகள் இந்த நாட்டில் உள்ளன. இந்நிலையில் மைக்கோபிளாஸ்மா போவிஸ் என்ற பாக்ட்டீரீயா கடந்த ஆண்டு; ஐரோப்பிய நாடுகளில் பரவியது. அந்த பாக்ட்டீரீயா தற்போது நியூசிலாந்திலும் பரவியுள்ளது. இதனால் வாய்ப்புண், உடல் வீக்கம் ஏற்பட்டு மாடுகள் உயிரிழக்கின்றன. இந்த பாக்ட்டீரீயா தாக்குதலால் பால் பொருட்களில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த பால் பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், பாக்ட்டீரியா மற்ற கால்நடைகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நியூசிலாந்து அரசு எடுத்து வருகிறது. எனினும் இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பாக்டீரியா வேகமாக பரவி வருவதால் பாதிக்கப்பட்ட பசுக்களை கொல்ல அந்நாட்டு அரசு இன்று முடிவு செய்துள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பசுக்களுக்கு இந்த பாதிப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பசுக்களுடன் உள்ள மற்ற சில பசுக்களையும் சேர்த்து மொத்தமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பசுக்களை கொன்று அதன் உடலை எரித்து விட திட்டமிடப் பட்டுள்ளது. பசுக்களை கொல்லும் நடவடிக்கை ஏற்கெனவே தொடங்கி விட்டது, இதுவரை 28,000 பசுக்கள் கொல்லப்பட்டுள்ளன. இது குறித்து நியூசிலாந்து தலைமை அமைச்சர் ஜச்சிந்தா ஆர்தர்ன் கூறியதாவது:

பசுக்களைத் தாக்கியுள்ள பாக்ட்ரீயாவை அழிக்க மேற்கொண்ட நடவடிக்கை கைகூடவில்லை. எனவே நீண்டகால நோக்கத்தை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பசுக்களை கொல்ல முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் இந்த பாக்ட்டீரியாவை முழுமையாக நியூசிலாந்தை விட்டு அகற்ற முடியும் என நம்புகிறோம். இதன் மூலம் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் நாட்டின் பண்ணை தொழிலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம் எனக் கூறினார்.

ஏன் பீட்டா அமைப்பு இந்த பசுக்களை ஏற்றுக் கொண்டு இழப்பீடு தராதா?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,801. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.