Show all

செல்பேசி செறிவட்டையும் வெளியடுகிறது! 11938000000 ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ள பதஞ்சலி நிறுவனம்

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இணைந்து சுதேசி செல்பேசி செறிவட்டை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். 

சோதனை முயற்சியாகப் பதஞ்சலி நிறுவனம் வெளியிட இருக்கும் செறிவட்டைகள் அவர்களின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. முழுமையாக வெளியிடப்படும் போது இந்தச் செறிவட்டைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குப் பதஞ்சலி பொருட்களை வாங்கும் பொது 10 விழுக்காடு சலுகை அளிக்கும் திட்டத்தில் உள்ளது. 

பதஞ்சலி செறிவட்டை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்களுக்கு 2.5 லட்சம் மதிப்பில் மருத்துவக் காப்பீடு மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீடு போன்றவையும் அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. 

பதஞ்சலி மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் இணைவது நாட்டின் நலனிற்கானது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார். சுதேசி செறிவட்டை எங்கு எப்போது கிடைக்கும் பிஎஸ்என்எல் உடன் இணைந்து பாபா ராம்தேவ் வெளியிட இருக்கும் இந்தச் 

செறிவட்டைகள் பிஎஸ்என்எல் கடைகள் மற்றும் பதஞ்சலி கடைகளிலும் விரைவில் கிடைக்கும் 

பதஞ்சலி நிறுவனத்துடன் இணைந்து 144 ரூபாய்க்கு 2 ஜிபி தரவு, 100 சேதிகள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் சேவை வழங்கப்பட இருப்பதாகவும் அதற்காக ஒப்பந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளரான சுனில் கர்க் உறுதி செய்துள்ளார். 

நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகத்தில் பதிகை செய்துள்ள விவரங்களின் படி பதஞ்சலி ஆயுர்வேத் கடந்த ஆண்டு நிகர லாபம் 53.7 விழுக்காடு உயர்ந்து 11938000000 ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளது என்று கூறியுள்ளது.

மோடி ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் தாழ்ந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் வஞ்சனையில்லாமல் வளர்ந்து வருவதோடு, பொதுத் துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொள்ளும் வேலைகளும் அரங்கேறி கொண்டுள்ளனவா?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,802. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.