14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராகிநகர் சட்டமன்றத் தேர்தலில் வென்ற பிறகு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டார் தினகரன். அதற்கேற்ப, சில மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வந்தார். நடராஜன் மரணமும் அதையொட்டி கொஞ்சம் ஓய்வுக்குப் பிறகு, கடந்த சில நாட்களாக சுறுசுறுப்பாக வலம் வருகிறார் தினகரன். சென்னை, அசோகர் தூண் அருகில் இருக்கும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் வீட்டை, சீரமைப்பு செய்யும் வேலைகள் நடந்து வந்தன. கட்சியின் தலைமை அலுவலகத்தை வடிவமைக்கும் வேலையில் தீவிரமாக இருந்தார் தினகரன். அந்த வீட்டில் ஏறக்குறைய அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில், திடீர் என வேறு முடிவை எடுத்திருக்கிறார். போயஸ் தோட்டத்தில் செயலலிதா வீட்டுக்கு எதிரிலேயே கட்சி அலுவலகத்தைத் திறக்க இருக்கிறார். இது சொந்தக் கட்டடம் என்றும் சொல்கிறார்கள். வரும் வைகாசி22ல் (சூன் 5) புதிய அலுவலகக் கட்டடத்தைத் திறக்க இருக்கிறார் தினகரன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் மையமாக போயஸ் தோட்டம் இருந்தது. வேறு இடத்தைப் பார்ப்பதைக் காட்டிலும் தோட்ட முகவரியே பலன் தரும் என்ற முடிவுக்கு வந்துள்ளார் தினகரன். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,801.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



