இராசல் கைமா மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4,868 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட புதிய உணவகம், இந்த வகைக்கு உலகின் முதலாவதான உணவகம் என்பதாக அடுத்த மாதம் திறக்கப்படுகிறது 31,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இராசல் கைமா மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 868 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய உணவகம் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது. அமீரகத்தின் வடக்கு பகுதியில் உள்ள முதன்மை நகரம் இராசல் கைமா ஆகும். இங்கு உள்ள ஜெபல் ஜைஸ் மலைப்பகுதியானது பல்வேறு வகைகளில் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறது. இந்த மலைப்பகுதி மொத்தம் 6 ஆயிரத்து 500 அடி உயரமானதாகும். இதனால் அமீரகத்தில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த மலைப் பகுதியைக் காண சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். குறிப்பாக மயிர்கூச்செரிய வைக்கும் சாகசத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் இந்த மலை பகுதிக்குத்தான் செல்ல வேண்டும் என்று பேசிக்கொள்ளப் படுகிறது. தற்போது இந்த மலைப்பகுதியில் ஒரு போற்றிக் கொள்ளத்தக்க சிறப்பான உணவகம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உணவகம் அடுத்த மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த உணவகம் மிகவும் உயரமான மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் உணவகம் என்ற பெருமையை பெறுகிறதாகச் சொல்லப்படுகிறது. இந்த உணவகம் கடல் மட்டத்தில் இருந்து 1,484 மீட்டர் (4,868 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய உணவகம் ஜெய்ஸ் சாகச மையத்தின் அருகாமையில் அமைந்து இருக்கிறது. ஹஜர் மலைத்தொடரில் பள்ளத்தாக்குகள் நடுவில் அழகியல் மிக்க சூழலில் இந்த உணவகம் அமைகிறது. இந்த உணவகத்தின் தரைதளத்தில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருப்பதால் தரையில் உள்ள செடிகள் உள்ளிட்டவற்றை காணும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் உணவினை சாப்பிட்டு விடுமுறையை இனிமையாக போக்க கூடிய சூழலை இந்த உணவகம் ஏற்படுத்திக் கொடுக்கும். இது குறித்து உணவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலிசன் கிரின்னெல் கூறும்போது, “ஜெபல் ஜைஸ் மலைப் பகுதியில் உள்ள பல்வேறு பொழுது போக்கு இடங்கள் ஒரு திகில் அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியன. மேலும் இந்தப் புதிய உணவகம் பார்வையாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத நினைவுகளைக் கொடுக்கும். உலக நலங்கு நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் வழிமுறைக்கு ஏற்ப சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படும். கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் இது செயல்படும்” என்று தெரிவித்தார். ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மலையின் உயரமும் அழகும் ஒப்பீட்டளவில் இதைவிட சிறப்பானதுதான். இங்கே இப்படி பெருமை பாராட்டும் வகையில் ஒரு தனித்துவமான அமைப்பு இல்லை யென்றாலும்கூட தொலைநோக்கி, பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர். இந்த ஆண்டு நீலகிரி மலையில் குறிஞ்சி மலர்கள் பூத்து பார்வையாளர்கள் வரவுக்காய் காத்து நிற்கின்றன. மற்றும் திகிலுட்டும் மலைப்பாதைகள், புலி மான் போன்ற விலங்குகளின் சரணாலயம், தாவரவியல் பூங்காக்கள், சொகுசான தங்கும் விடுதிகள், சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டு நாட்கள் தங்கி பார்க்கும் வகையாக ஏராளமான அழகியல் காட்சிகளின் கொட்டிக் கிடக்கின்றன நீலகிரி மலையில். நீலகிரி மலை பகுதியில் உற்பத்தியாகும் மோயாற்றின் ஒரு பகுதி பவானி சாகர் நீர்த்தேக்கத்திற்கு வந்தடைகிறது. மற்றொரு பகுதி கர்நாடகா மாநிலத்திற்கு செல்கிறது. இந்த ஆறு தமிழக எல்லை பகுதியில் உற்பத்தியாகிறது. எனவே, இந்த மோயாறு முழு தண்ணீரை பெற நீலகிரி மலை பகுதியில் இருந்து கர்நாடகாவிற்கு பாயும் தண்ணீரை தடுத்து, தமிழக எல்லையில் அங்கு அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவினர் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த இடத்தில் அணை கட்ட முடிந்தால் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் பெற முடியுமா என்பது ஆய்வுக்கு பிறகு தான் தெரிய வரும். நீலகிரி மலை தமிழகத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம் ஆகும். இம்மலையின் உச்சியில் இருந்து சாமுண்டி மலையைப் பார்க்க முடியும். நீலகிரி மலையின் உயரமான சிகரம் தொட்டபெட்டா. தொட்டபெட்டா என்ற சொல் கன்னடம் ஆகும். கன்னடத்தில் தொட்ட என்றால் பெரிய, பெட்டா என்றால் மலை. எனவே பெரிய மலை எனப் பொருள்படும் படி இது தொட்டபெட்டா என்று பிற்காலத்தில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. தொட்டபெட்டாவின் சங்க காலப் பெயர் தோட்டி மலை. கோட்டையுடன் விளங்கிய இதனைச் சங்ககாலச் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை வென்று தனாக்கிக்கொண்டான். யானையை அடக்க உதவும் அங்குசத்துக்கு வழங்கப்பட்ட தமிழ்ப்பெயர் தோட்டி. தோட்டி போல் உயர்ந்தோங்கி நின்ற முகடு தோட்டி எனப்பட்டது. நள்ளி இந்த மலையின் அரசன். இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். நீலகிரி மலை அக்காலத்தில் நளிமலை என்றே அழைக்கப்பட்டது. நளிமலை என்னும் பெயரிலுள்ள நளி என்னும் சொல் குளிர் மிகுதியைக் குளிக்கும். நளி என்னும் சொல் பெருமை, செறிவு என்னும் பொருள்களை உணர்த்தும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டிலேயே பெரியமலை ஆதலாலும், குளிர்மலை ஆதலாலும் இது நளிமலை எனப் பெயர் பெற்றது கன்னடர்கள் ஆட்சிகாலத்தில், நளிமலை நளிகிரி, நீலகிரி என்றாகி தற்போது நீலகிரிமலை என்று அழைக்கப்படுகிறது. கிரி என்றால் மலை. உலக நாடுகளில் உற்பத்திக்கான அடிப்படை சுற்றுலாவாகவே இருக்கிற பல நாடுகளில் தம்மக்களிடம் வருமான வரி கூட வாங்காத அளவிற்கு சுற்றலாவில் சிறப்பான வருமானம் இருக்கிறது. அந்த வாய்ப்பு தமிழகத்திற்கு மிகச் சிறப்பாக தமிழ்முன்னோர்களால் விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. எந்த ஒரு சிறியபாட்டிற்கும்கூட ஒன்றிய அரசின் அனுமதிக்கு நெடுங்காலம் காத்திருக்கிற காரணம் பற்றியோ, பாதுகாப்பு காரணம் பற்றியோ தமிழகத்தின் சுற்றுலா வாய்ப்புச் சிறப்பு உலகஅளவில் போற்றிக் கொள்ளும் வகையாக முன்னெடுக்கப்படாமல் இருக்கிறது. அருமையாக சுற்றுலா வாய்ப்பை உருவாக்குவதற்கு ஏதுவான கட்சத்தீவை தமிழகத்தின் அனுமதி இல்லாமலே ஒன்றிய அரசில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தூக்கிக் கொடுக்கப்படுகிறது. இராசல் கைமா மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 868 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் முதலாவதான உணவகம் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது என்பது போன்ற பெருமைப்பாடுகளின் போது, அதனினும் ஏறத்தாழ இரண்டு மடங்கு உயரமான நமது நளிமலையைக் கொண்டாடி தமிழகத்தாலும் இதைவிட சிறப்பாக சாதிக்க முடியுமே என்கிற உறுத்தல் நம்; நெஞ்சத்தில் ஆக்கிரமித்து நிற்கின்றது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



