Show all

கழிவுகள் பட்டியலில் புதியதாகச் சேர்ந்திருப்பது முகமூடிகள்!

தற்போது கடலில் கலக்கும் கழிவுகள் பட்டியலில்; முகமூடிகள், பாதுகாப்பு உடைகள் இணைந்து கொண்டுள்ளன.

26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடலில் இதுவரை நெகிழி உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது உலகமெங்கும் முகமூடிகள், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவை கடலில் அதிகம் காணப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இந்தக் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பை எதிர்கொள்ளும். கடலில் பிடிக்கப்படும் மீன்களால் நாம் புதிய வகை நோயுக்கும் ஆளாகலாம் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.