Show all

உலகந்தழுவி எதிர்ப்பு வலுக்கிறது! இந்திய மாணவர்களை கொரோனாவுடன் மோதவிடும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் ஜேஇஇ தேர்வுகளுக்கு

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நிலவும் காலத்தில் பொறியியல் நுழைவுத் தேர்வு ஜேஇஇ மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்படாமல் தள்ளிவைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக துணை நிற்பேன் என்று பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.

10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நிலவும் காலத்தில் பொறியியல் நுழைவுத் தேர்வு ஜேஇஇ மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்படாமல் தள்ளிவைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக துணை நிற்பேன் என்று பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தமது கீச்சுப் பதிவில் “கொரோனா பெருந்தொற்று மற்றும் பல இடங்களில் கடுமையான வெள்ளத்தின் தாக்கத்தை லட்சக்கணக்கானோர் அனுபவித்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள மாணவர்களை கொரோனாவுடன் மோதவிடும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் ஜேஇஇ தேர்வுக்கு அழைப்பது  நியாயமல்ல என்றும், தேர்வைத் தள்ளி வைக்கக் கோரும் அவர்களுக்கு நான் துணை நிற்பேன் என்றும் கூறியுள்ளார்.

இதேபோல, நாட்டின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்திய மாணவர்களை கொரோனாவுடன் மோதவிடும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் ஜேஇஇ தேர்வுகளை இந்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்று பேரறிமுக ஹிந்தி நடிகரான  சோனு சூட் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நெருக்கடியில் நாம் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மாணவர்களின் உயிரை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரானா மற்றும் பெருவெள்ளத்தின் பாதிப்புகளை எதிர்கொண்ட மாநிலங்களில் அஸ்ஸாம், பிஹார், குஜராத், சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிஷா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த மாநிலங்கள், ஏற்கெனவே நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று நடுவண் பாஜக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எங்கள் மாணவர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் உபரியாகவே உள்ளன. எங்கள் மாணவர்களின் கல்வி உரிமையை வட இந்திய மாணவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் வகைக்கு மட்டுமே உதவும் நீட் தேர்வு எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்பதே நீட் திணிப்பு தொடங்கியதிலிருந்தே தமிழகத்தின் நிலைப்பாடாக இருக்கிறது.

இந்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஐஐடி, நீட் தேர்வுகள் எக்காரணத்தைக் கொண்டும் தள்ளிவைக்கப்படாமல் செப்டம்பர் மாதத்திலேயே நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.