Show all

ஏர்டெல்லில், 597 ரூபாயில் அதுவும் 168 நாட்களுக்கு அன்றாடம் 10ஜிபி தரவு! ஆனால் நீங்கள் வாங்க முடியாது- ஏராளமான நிபந்தனைகள்

பெரும்பாலோனோருக்கு சீ சீ இந்தப்பழம் புளிக்கும் வகையாக ஏர்டெல் மிகச்சிறந்த மலிவான திட்டத்தை கொணர்ந்திருக்கிறது. சும்ம தெரிந்து கொள்வோம்.

09,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: மிக மலிவு விலையில் ஏர்டெல் நிறுவனம் 168 நாட்கள் பயன்பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் அன்றாடம் 10 ஜிபி தரவு வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் விலை ரூ.597 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகள் கிடைக்கின்றன. இந்த அம்சம் புதிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டமானது புதிய செல்பேசி வாங்கிய 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும். 

அதோடு இது மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, உத்திரபிரதேசம் கிழக்கு மேற்கு, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, மத்திய பிரதேச பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பிட்டுள்ள பகுதிகளை தவிரப் பிறப்பகுதிகளில் இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் 112 நாட்கள் ஆகும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.