Show all

அமெரிக்கவில், தகவல் தொழில் நுட்பத்துறை வேலைக்கு இனி இந்தியர்கள் வேண்டாமாம்! இந்திய நிறுவனங்களிலும் அமெரிக்கர்களே.

அமெரிக்காவில் இருக்கும் தகவல் தொழில் நுட்பத்துறை வேலைகளுக்கு நம் இந்தியர்கள் வேண்டாம் என இந்திய நிறுவனங்களே முடிவெடுத்துள்ளன. டிரம்பின் கெடு பிடியான நுழைவிசைவு சட்டங்களால், ஹெச் 1 பி நுழைவிசைவு கொடுப்பது மற்றும் புதுப்பிப்பது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது என்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.

08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் இருக்கும் தகவல் தொழில் நுட்பத்துறை வேலைகளுக்கு நம் இந்தியர்கள் வேண்டாம் என இந்திய நிறுவனங்களே முடிவெடுத்துள்ளன. இந்த முன்னெடுப்புக்கு காரணம் திறமையோ அல்லது கல்வியோ கிடையாது. நடைமுறை சிக்கல்கள் மற்றும் நிதிப் பிரச்னைகள் தான்.

டிரம்பின் கெடு பிடியான நுழைவிசைவு சட்டங்கள் மற்றும் அதிகமான கட்டணங்கள் காரணமாக இந்திய தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்களே, தற்போது அமெரிக்கர்களை, பெரிய அளவில் வேலைக்கு எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

இன்போசிஸ் நிறுவனம், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், தன் தொழில் நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தில் வேலை பார்க்க சுமார் 1,000 அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இன்போசிஸ் நிறுவனம், ஏற்கனவே 10,000 அமெரிக்கர்களை வேலைக்கு எடுப்பதாகச் சொல்லி இருந்தது. சொன்ன படி 10,000 அமெரிக்கர்களை வேலைக்கு எடுத்து முடித்துவிட்டதாக இன்போசிஸ் நிறுவனம் தரப்பிலேயே சொல்லப்படுகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்திலேயே, இதுவரை சுமார் 30,000 அமெரிக்க ஊழியர்களை பணியில் அமர்த்தி இருக்கிறார்களாம். அமெரிக்க தகவல் தொழில் நுட்பத் துறையில், அதிக அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்கும் இந்திய தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்களில் டாடா கன்சல்டன்சி முதல் இடத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறதாம். 

மற்றொரு இந்திய தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனமான ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்திலும், அமெரிக்க அலுவலகங்களில் சுமார் 17,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்களாம். அதில் சுமார் 65 விழுக்காடு ஊழியர்கள் அமெரிக்கர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்படியாக இந்திய தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், சிக்கலான மற்றும் அதிகம் செலவு பிடிக்கும் ஹெச்1பி நுழைவிசைவு பயன்பாட்டை குறைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அது இந்திய தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்கள் கனவை நேரடியாக பாதிக்கத் தொடங்கி இருக்கிறது.

தற்போது இந்தியாவில் இருந்து மொத்தம் 85,000 பேர் மட்டுமே ஹெச் 1 பி நுழைவிசைவு வழியாக அமெரிக்காவுக்குச் செல்ல முடியும். அதில் 20,000 பேர் அமெரிக்காவிலேயே பெரிய பட்டப் படிப்புகள் படித்தவர்களுக்கு என சிறப்பு ஒதுக்கீடு இருக்கிறது. அந்த 20,000 சிறப்புக் ஒதுக்கீடு போக, மீதம் இருக்கும் 65,000 நுழைவிசைவுகள் தான் சராசரி இந்தியர்களுக்கு கிடைக்கும். அதுவும் இந்தியப் பொருளாதரம் ஆட்டம் கொண்டிருக்கும் இந்த நிலையில்

ஹெச் 1 பி நுழைவிசைவு கொடுப்பது மற்றும் புதுப்பிப்பது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது என்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,286.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.