இடி மின்னலுடன் மழை பெய்த போது, வேளாண் நிலத்தில் இடி தாக்கியதால் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பீறிட்டு வருகிறது. இந்த அதிசயத்தைக் காண மக்கள் படையெடுத்துள்ளனர். 08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வேளாண் நிலத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பீறிட்டு வருகிறது. நிலத்தில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறும் இந்த அதிசயத்தை காண அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வருகின்றனர். இடி மின்னலுடன் மழை பெய்த போது, இந்த வேளாண் நிலத்தில் இடி தாக்கியதால் நிலத்தில் இருந்து அதிசயமாக நீர் பிறீட்டு வெளிவரக்கூடும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக தண்ணீர் வெளியேறி வருவதால் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த நிலத்தில் இரண்டு அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இது எவ்வளவு நீடிக்கும் என்று தெரியவில்லை பேசிச் செல்கின்றார்கள் மக்கள். இது தொடர்ந்து நீடிக்காது என்றே அனுபவம் நிறைந்த பெரியவர்கள் தெரிவிக்கிறார்கள் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,286.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.