Show all

பாஜகவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், உலகம் முழுவதும் செல்லுபடியாகிறதா! நாங்கள் சீனா இல்லை அமெரிக்கா, என்று நிறுவ முயலும் நிறுவனங்கள்

ஒட்டு மொத்த உலக நிறுவனங்களே தாங்கள் குடியுரிமையை நிலைநாட்டும் வகைக்கு பயன்பட்டு வருகிறது இந்தியா அரசு, 59 சீன செல்பேசி செயலிகளுக்குத் தடைவிதித்த தடை.

26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா அரசு, 59 சீன செல்பேசி செயலிகளுக்குத் தடைவிதித்த நிலையில், இப்போது பல நிறுவனங்கள், தாங்கள் சீன நிறுவனமல்ல அமெரிக்கா, நார்வே என்று தங்கள் குடியுரிமையை நிறுவ முற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பாஜக நடுவண் அரசு இந்தியாவிற்கு மட்டுந்தானே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தது. 59 சீன செல்பேசி செயலிகளுக்குத் தடைவிதித்த வகையில் உலகத்திற்கு குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்த மாதிரி ஆகிவிட்டதே என்று பகடி ஓடிக் கொண்டிருக்கிறது.

அவசர அவசரமாக உலகின் பல நிறுவனங்கள் தாங்கள் சீனா இல்லை என்று மறுத்து வருகின்றன. அண்மையில் இந்த பட்டியலில் சேர்ந்திருப்பது, காணொளி அழைப்புக்கான, ‘ஜூம்’ செயலி. ‘நாங்கள் சீன நிறுவனமல்ல் அமெரிக்க நிறுவனம்’ என தெரிவித்துள்ளது, இந்நிறுவனம்.

இது குறித்து, 'ஜூம் காணொளி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் சமீர் ராஜே கூறியதாவது: ஜூம் நிறுவனம், சீனாவை சேர்ந்தது கிடையாது. இது ஓர் அமெரிக்க நிறுவனம். எங்களது தரவுகள், இந்தியாவுக்கு வெளியே சேமிக்கப்படவில்லை என்பது குறித்து அரசுக்கு விளக்கி இருக்கிறோம் என்பதாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.