சீனாவில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு ஒட்டுமொத்த சீனாவின் மீதும் தூய்மைப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறதாம் சீனா. குறிப்பாக பணத்தாள்கள் மீது கடுமையான தூய்மைப்பாட்டு நடவடிக்கை. 05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு ஒட்டுமொத்த சீனாவின் மீதும் தூய்மைப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறதாம் சீனா. சீனாவில் கெரோனா தொற்று பரவிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பணத்தாள்களைத் திரும்ப பெற முடிவு செய்துள்ளனர். கொரோனா தொற்றால் சீனாவில் பலி எண்ணிக்கை 1770 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 71000 பேர் நுண்ணுயிரித் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த நுண்ணுயிரி ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு மட்டுமின்றி, ஒரு பொருளில் இருந்தும் கூட இன்னொரு பொருளுக்குப் பரவும். அதாவது இந்த நுண்ணுயிரி தாக்கிய நபர் எதை தொடுகிறாரோ, அதை தொடும் மக்களுக்கு உடனே நுண்ணுயிரி பரவ வாய்ப்புள்ளது. சாதராண வெப்பநிலையில், இந்த நுண்ணுயிரி உயிரில்லாத பொருட்களில் 14 நாட்கள் வரை இருக்கும். சீனாவில் இந்த நுண்ணுயிரி மிக வேகமாக பரவியதற்கு இது மிக முதன்மைக் காரணம் ஆகும். இந்த நுண்ணுயிரி அதிகமாக சீனாவின் பண தாள்கள் மூலம் பரவி உள்ளது. அதாவது நோயாளிகள் தொட்ட பண தாள்களைப் பயன்படுத்துவதால் மற்றவர்களுக்கும் நோய் பரவி உள்ளது. இதனால் இந்த நுண்ணுயிரியைக் கட்டுப்படுவது சிரமமான செயலாக மாறியுள்ளது. இதனால் தற்போது சீனாவில் இந்தப் பணத்தாள்களை தூய்மைப்பாட்டுக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி முதற்கட்டமாக இந்தப் பணத்தாள்கள் அனைத்தையும் திரும்ப பெற முடிவு செய்துள்ளனர். அதற்கு பின் புதிய பணத்தாள்களை புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளனர். ஆனால் நம்ம மோடியை போல் திரும்பப் பெற்ற அத்தனைப் பணத்தாள்களையும் ஒட்டுமொத்தமாக செல்லாததாக்கி, இந்தியாவை நடுவண் பாஜக அரசு இழிநிலைக்குத் தள்ளியதைப் போல சீனப் பொருளாதாரத்தைச் சீரழிக்கப் போவதில்லையாம். மொத்தம் 600 பில்லியன் யென் மதிப்பு கொண்ட பணத்தாள்களை இவர்கள் திரும்ப பெற இருக்கிறார்கள். அந்தப் பணத்தாள்கள் மீது யு வி கதிர் வீச்சு செலுத்தப்படும். இதன் மூலம் அந்தப் பணத்தாள்கள் வெப்பப்படுத்தப்படும். இதன் மூலம் அதில் இருக்கும் கொரோனா தொற்று அழிய வாய்ப்புள்ளது. அதன்பின் அதை 14 நாட்கள் பூட்டிய அறையில் வைத்து இருப்பார்கள். பின் 14 நாட்கள் கழித்து மீண்டும் அதை யு வி கதிர் வீச்சு மூலம் சூடுபடுத்துவார்கள். இதன் மூலம் அதில் இருக்கும் கொரோனா நுண்ணுயிரி எல்லாம் மொத்தமாக அழிக்கப்படும். அதன்பின் அந்தப் பணத்தாள்கள் மீண்டும் பயன்படுத்தப்படும். இடைப்பட்ட காலத்தில் புதிய பணத்தாள்கள் பயன்படுத்தப்படும் என்று அறியமுடிகிறது. பணத்தாள்கள் மட்டுமின்றி மற்ற பொது சேவை சாதனங்களையும் இதேபோல் தூய்;மைப்பாட்டிற்கு உட்படுத்த உள்ளனர். அதாவது பேருந்து, விமானம், தொடர்வண்;டி, மெட்ரோ போன்ற சாதனங்களையும் இவர்கள் தூய்;மைப்பாட்டிற்கு உட்படுத்த உள்ளனர். தூய்மைப்பாட்டிற்கு தமிழர்களிடம், நலங்கு வைத்தல் என்கிற நடவடிக்கை பல ஆயிரம் ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காது குத்துதலின் போது குழந்தைகளுக்கும், பூப்பு நன்னீராட்டின் போது பெதும்பையருக்கும், திருமணத்தின் போது மணமக்களுக்கும், வளைகாப்பின் போது தாய்மை எய்திய பெண்ணுக்கும் நோயிலிருந்தும், பார்வையிலிருந்தும் காப்பு செய்வதற்காக நலங்கு (மஞ்சள் பூசி) வைத்து குளிக்க வைப்பார்கள். அது போல, ஒட்டு மொத்த சீனாவிற்கும் கொரோனா பாதுகாப்பிற்காக நலங்கு வைக்கப் போகிறது சீனா. சிறப்பு சீன அரசே!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



