கேரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கிற முயற்சியைக் கடந்து, 39ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கற்பனைக் கதையில் சொல்லப்பட்டிருந்தது, தற்போது சீனாவைப் புரட்டி எடுத்துவரும் கெரோனா போன்ற ஒரு நுண்ணுயிரியைப்பற்றிய செய்தி என்பதான பொருத்தத்தைக் கண்டுபிடித்து உலக மக்களால் வியப்போடு பேசப்பட்டு வருகிறது. 06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கற்பனைக் கதையில் சொல்லப்பட்டிருந்தது, தற்போது சீனாவைப் புரட்டி எடுத்துவரும் கெரோனா போன்ற ஒரு நுண்ணுயிரியைப்பற்றி செய்தி என்பதாக உலக மக்களால் வியப்போடு பேசப்பட்டு வருகிறது. சீனாவின் கூபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில், பரவிய கோவிட்-19 என்ற நுண்ணுயிரி அந்த நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நுண்ணுயிரி சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலம் உலகின் சில நாடுகளிலும் பரவியது. சீனாவில் மட்டும் கோவிட்-19 நுண்ணுயிரியால் 1770 பேர் பலியாகியுள்ளனர். 70 ஆயிரத்து 548 பேர், நுண்ணுயிரி பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கோவிட்-19 வைரஸை போல ஒரு உயிர்கொல்லி வைரஸ் பற்றி டீன் கூன்ட்ஸ் எழுதிய, இருளின் கண்கள் (தி அய்ஸ் ஆப் டார்க்னஸ்) என்ற கற்பனையான திகில் கதையில் கூறப்பட்டுள்ளது. அதுவும் சீன ராணுவ ஆய்வகம், போர்க்காலத்தில் உயிரி ஆயுதமாக பயன்படுத்த, மனிர்களை மட்டுமே பாதிக்கும், புதிய நுண்ணுயிரி தயாரிப்பில் ஈடுபட்டு, 'வூஹான்-400” என்ற உயிர்கொல்லி நுண்ணுயிரியை உருவாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 'கோவிட்-19' என பெயரிடப்பட்ட கொரோனா நுண்ணுயிரி, வூஹான் நகரில் தான் முதன்முதலில் பரவியது. நாவலில் அதே பெயரில் நுண்ணுயிரி உருவாக்குவதாக எழுதப்பட்ட இந்த தற்செயலான இந்தப் பொருத்தம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாவல் எழுதிய டீன் கூன்ட்ஸை தொலைநோக்காளராகச் சிலரும், நாவலில் உள்ளது போல, உயிரிஆயுதமாக இந்தக் கொரோனாவை சீனா உருவாக்கியிருக்கக்கூடும் என்றும், ஆய்வகத்தில் இருந்து தவறுதலாக பரவி அந்நாட்டு மக்களையே அழித்து வருவதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர். கேரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கிற முயற்சியை முன்னெடுப்பதில் தொய்வு இருந்தாலும், சீனாவின் மீது பலிபோடுவதற்கு ஏதாவது கிடைக்காதா என்று தேடல் மேற்கொண்டிருந்தவர்களுக்கு சிறப்பானதொரு அவல் செய்தியாக கிடைத்திருக்கிறது இருளின் கண்கள் கற்பனைக் கதையில் வந்திருந்த செய்தி. ஆம்! 39ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கற்பனைக் கதையில் சொல்லப்பட்டிருந்தது, தற்போது சீனாவைப் புரட்டி எடுத்துவரும் கெரோனா போன்ற ஒரு நுண்ணுயிரியைப்பற்றிய செய்தி என்பதான பொருத்தத்தைக் கண்டுபிடித்து உலக மக்களால் வியப்போடு பேசப்பட்டு வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



