தப்பித்தல் மீதான சுட்டுக்கொல்லல்- இன்று அதிகாலை டெல்லி பிரகலாத்பூரில் சிறப்பு படை காவல் துறையினரால் முன்னெடுக்கப்பட்டது இரண்டு போக்கிரிகள் சுட்டுக்கொலை. 05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். இன்று அதிகாலை பிரகலாத்பூரில் சிறப்பு படை காவல் துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க முயன்றபோது அவர்கள் காவல்துறையினரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்ப முயன்றனராம். இதையடுத்து காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த ‘தப்பித்தல் மீதான சுட்டுக்கொல்லல்’ நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பேரறிமுக போக்கிரிகள் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என அடையாளம் தெரிந்துள்ளது. இவர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. டெல்லியில் நேற்றுதான் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதல்வர் பதவியேற்பு விழா சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், சிறப்பு படை காவல் துறையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ‘தப்பித்தல் மீதான சுட்டுக்கொல்லல்’ நடவடிக்கை கூடுதல் கவனம் பெறுவதாகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



