Show all

தீயாகி வரும் மோடியின் காணொளி! காணொளிக்கான உண்மை விளக்கங்கள் உலகளாவி தேடப்படுகிறது. கடுப்பில் சில புரளிகளும் அரங்கேற்றம்

மோடி மீது மக்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் எல்லையற்ற கோபம்! அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அவர் மீது இருக்கிற கடுப்பில்: பலவிதமாகவும் காரணம் கற்பிக்க ஏதுவான ஒரு காணொளி கிடைத்தது என்பதற்காக, கொஞ்சம் கூடுதலாக அவரைக் கலாய்த்து நம்மை தாழ்த்திக் கொள்ள வேண்டாமே என்பது சில நடுநிலையாளர்களின் அறிவுரை.

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தக் காணொளியில்- 
இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை ஒப்பனை கலைஞர்கள் அழகுப்படுத்துகிறார்கள் என்று விளக்கம் சொன்னால் பொருந்துவதாகவே இருக்கிறது. 

ஆனால் இந்த காணொளி குறித்த விவரிப்பில், 'தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெற்ற தகவல்களில், தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியின் ஒப்பனை செலவுகளுக்காக மாதந்தோறும் சராசரியாக 80 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளதை யாரும் நம்பத்தான் செய்வார்கள். 

ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மோடி குறித்து இப்படியான கேள்வி எதுவும் கேட்கப் படவில்லையாம். அதே சமயம் அவர் ஒப்பனை செய்வதற்கு எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை அவரே சொன்னால்தான் தெரிந்து கொள்ள முடியும். இப்படியிருக்க இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பல லட்சக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

உண்மையில் இந்தக் காணொளி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. மேடம் தசௌட்ஸ் வேக்ஸ் அருங்காட்சியகத்தை சேர்ந்த குழுவினர் தங்களின் அருங்காட்சியகத்தில் அமைத்து வருகின்ற மோடியின் மெழுகுச் சிலையின் மாதிரிக்கு, அளவுகள் மற்றும் பிற விவரங்களை எடுப்பதற்கு மோடியின் இல்லத்திற்கு வந்திருந்தபோது இந்தக் காணொளி எடுக்கப்பட்டுள்ளது.

மேடம் தசௌட்ஸ் அமைப்பையும் இந்தக் காணொளியில் காணலாம். உண்மையான காணொளி மேடம் துசாத்தின் வலையொளி பக்கத்தில் உள்ளது.

15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5118 அன்று (28.04.2016) லண்டன் மேடம் தசௌட்ஸ் அருங்காட்சியகத்தல் மோடியின் மெழுகுச் சிலை நிறுவப்பட்டது.

மனுசனுக்கு ஐந்து ஆண்டுகளாக நாம் கொடுத்த மரியாதையும், கௌரவமும் மிக மிக அதிகம்! ஆனால் இந்த மனுசன் மக்களுக்காகவும், குறைந்த பட்சம் தன் புகழை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவாவது ஒரு ஆணியும் பிடுங்கவில்லை என்பதுதாம் ஒட்டுமொத்த உலகத்திற்குமான வருத்தம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,149.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.