Show all

தமிழனுக்கு பெருமை சேர்த்து, பெருமை கொண்ட ஜப்பான்!

தமிழகத்தின் கோவை மாவட்டத்தை சேர்ந்த இயந்திரவியல் பொறிஞர். சவுந்தரராஜன் குமாரசாமித்தமிழனின், கண்டுபிடிப்பை அங்கிகரித்து, தமிழனுக்கு பெருமை சேர்த்து, தானும் பெருமை கொண்டது ஜப்பான். இவர் 'சூழல்நட்பு வாகன இயக்குபொறியைக்' கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பொறிஞர். சவுந்தரராஜன் குமாரசாமித் தமிழன் வடிவமைத்துள்ள இயக்குபொறியானது நீர்வளி எரிபொருளை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசில்லாத உயிர்வளியை வெளியிடுகிறது. இந்த இயக்குபொறி ஜப்பான் நாட்டில் கூடிய விரைவில் வெளிவரவுள்ளது. 

'தாம் கண்டுபிடித்துள்ள இந்த புதிய வகை இயக்குபொறி ஜப்பான் நாட்டு வாகனங்களில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்துவதே என் கனவு.

எனது கண்டுபடிப்பை எடுத்து கொண்டு அனைத்து வாகன நிறுவனங்களின் கதவுகளை தட்டினேன். ஒரு இடத்திலிருந்தும் தமக்கு சாதகமான பதிலை பெற முடியவில்லை. எனவே தான் தாம் ஜப்பான் அரசின் கவனத்திற்கு இந்த கண்டுபிடிப்பை எடுத்து சென்றேன்.

இந்த கண்டுபிடிப்பை பார்த்து வியந்த ஜப்பான் அரசு, அவர்கள் நாட்டில் அதனை வெளியிட உரிய அனுமதி வழங்கி கவுரவித்துள்ளது.  இந்த இயக்குபொறியை கண்டுபிடிக்க சுமார் 10 ஆண்டுகள் ஆனது' என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய சவுந்தரராஜன் குமாரசாமி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,150.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.