தமிழகத்தில் மதிப்பும் மரியாதையும் விரும்பும் பிரபலங்கள் யாரும்: தங்களை பாஜக என்று யாராவது புரளி கிளப்பினால் கூட, கிடு நடுங்கி விடுகிறார்கள். ஐய்யய்யோ! கீர்த்தி சுரேஷ் பாஜகவில் இணையவில்லை. விளக்கம் சொல்ல அலறியடித்துக் கொண்டு ஓடி வருகிறார் தாயார் மேனகா. 28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: 'மீண்டும் பாஜகவா சகித்துக் கொள்ளுமா இந்தியா' என்று இந்த முறை பாஜக ஆட்சிக்கு வருவது இந்தியாவிற்கு ஆபத்து என்று உலகப் புகழ் பெற்ற இதழ் 'டைம்' கட்டுரை வெளியிட்டிருக்கிறது. நிறுவனம் சார்ந்த பாஜகவினர், தமிழகத்தில் எடப்பாடி- பன்னீர் தவிர்த்து உலகம் முழுவதும் பாஜகவின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பாஜகவில் இணைந்து விட்டார் என்ற புரளி கிளம்ப, தாயார் மேனகா அதிர்ந்து போய்விட்டார். மேனகா ரஜினிகாந்தின் நெற்றிக்கண் படத்தில் கதைத்தலைவியாக நடித்தவர். கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர். கீர்த்தி சுரேஷின் பாட்டியும் நடித்து வருகிறார். ஆம்மாடியோவ் தமிழகத்தில் இது ரொம்ப ஆபத்தான புரளியாயிற்றே என்ன செய்வது என்று பதறியடித்து, புரளிக்கு பதிலளிக்கும் விதமாக நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். திரைத்துறை பிரபலங்கள் சிலர் மோடியைச் சந்திக்க இருக்கிறார்கள். நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். சுரேஷ் கோபி, கவிதா என்று எனக்கு அறிமுகமான சிலர் இருந்ததால் நானும் கலந்து கொண்டேன். பாஜக அலுவலகத்தில் தான் அந்த சந்திப்பு நடந்தது. அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அதுதான் இப்படி வெளியாகியுள்ளது. இதில் கீர்த்தியையும் இணைத்து செய்திகள் வெளியாகியுள்ளன. எனக்கோ எனது மகளுக்கோ, பாஜகவில் என்ன? அரசியலிலேயே ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இப்போதுவரை இல்லை என்று பதறியுள்ளார் மேனகா. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,149.
இந்நிலையில் மேனகா சுரேஷ் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மோடியைச் சந்தித்துவிட்டு வந்தது கீர்த்தி சுரேஷ் பாஜகவில் சேர்ந்து விட்டதான புரளிக்கு காரணமாகி விட்டது.
அதில்: 'என் கணவர் சுரேஷ் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். ஆனால் நானெல்லாம் பாஜகவில் மட்டுமல்ல எந்தக் கட்சியிலும் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. கீர்த்தி சுரேசும் என்னை மாதிரிதான்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.