கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக, தனது உற்பத்திகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, ஆண்டுக்கு சுமார் ரூ.38 ஆயிரம் கோடியை மிச்சம் பிடித்து வந்த, இந்திய தொழில் நிறுவனங்களுக்கான வரியில்லா வர்த்தக முன்னுரிமை சலுகையை, அமெரிக்க இரத்து செய்துள்ளது. 19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த 45 ஆண்டுகளாக இந்தியாவிற்கு வழங்கி வந்த வர்த்தக முன்னுரிமை சலுகையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இது வரும் புதன்கிழமையிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது. இந்த வர்த்தக சலுகை மூலம், இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை அமெரிக்கவில் விற்று பயன்பெறுகிற தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.38 ஆயிரம் கோடி இலாபம் கிடைத்து வந்தது. இனி அமெரிக்காவிற்கு தனது உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள், வருங்காலங்களில் ஆண்டுக்கு ரூ.38 ஆயிரம் கோடியை இலாபத்தில் இழக்க வேண்டியிருக்கும். கடந்த 45 ஆண்டுகளாக அமெரிக்கா, இந்தியாவிற்கு முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் தகுதியை வழங்கியிருந்ததற்கான காரணம், அமெரிக்காவிற்கு தனது உற்பத்திகளை அனுப்பும் இந்தியத் தொழில் நிறுவனங்களின் நியாயத்தன்மையே. ஆனால் மோடியின் பணமதிப்பழப்பு நடவடிக்கையால், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சிறப்பாக கோவை, திருப்பூர், சென்னை ஆகிய நகரங்களில், தமது உற்பத்திகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்கள் நடப்பு மூலதன குறைபாட்டால், நசிந்தன. தங்கள் நிறுவனங்களில் பணியாற்றி வரும் முழுத்திறன் பணியாளர்களைகளை குறைத்துக் கொண்டு பகுதி திறன் பணியாளர்களை நியமித்து உற்பத்திகளை தயாரித்து வருவதால், உற்பத்திகள் அமெரிக்க தரநிர்ணயத்தில் தகுதி இழந்தன. அமெரிக்காவின் உள்நாட்டு சந்தை வர்த்தக போக்குவரத்துக்கு, இது தடையானது குறித்து, டிரம்ப் மோடிக்கு பல முறை அறிவுறுத்தியும், தன் கார்ப்பரேட் நண்பர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூற மோடி சும்மா இருந்து விட்டார். அதன் பொருட்டே டிரம்ப் முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் தகுதியை இந்தியாவிற்கு இரத்து செய்து விட்டார். மோடியின் பணமதிப்பிழப்பால் நசிந்த நிறுவனங்களை, அமெரிக்காவின் இந்த முன்னுரிமை வர்த்தக சலுகை இரத்து மேலும் பாதிக்கும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,171.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.