சுயசிந்தனை இல்லாமல், எசமானருக்கு வாலாட்டும் நாய்கள் குரைக்கும் போது, அந்த நாய்களை நாம் விலைக்கு வாங்கியிருந்தால், நமக்காக குரைக்கும் என்கிற உண்மையை நாம்தாம் புரிந்து கொள்ள வேண்டும். நேற்று 'ஹிந்திஎதிர்ப்பு சந்திப்புஎடுப்பு' உலக அளவில் தலைப்பான நிலையில், இன்று சிலர் 'தமிழகத்திற்கு ஹிந்தி வேண்டும்' என்பதாக தங்கள் எசமான விசுவாசத்தை பதிவிட்டு வருகிறார்கள். அந்த நாய்களை நமது வீட்டு முற்றத்தில் கட்டிப் போடுவது மட்டுந்தாம் முறையான தீர்வாக அமைய முடியும். அவைகளை திட்டித் தீர்ப்பதை விட்டு விட்டு, அந்த நடிவடிக்கைக்காக முயல்வோம். 19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தி மொழி இந்தியாவில் அதிக நபர்களுக்குத் தாய் மொழியாக இருக்கிறது. அந்த நபர்களிடம் சம்பளம் பெற்று சேவகம் நடத்தும் எந்த மொழியினரும் அந்த நபரின் மொழியைக் கற்க எந்தத் தடையும் இல்லை. என் மாநிலத்தைச் சேர்ந்தவனோ, என்மாவட்டத்தைச் சேர்ந்தவனோ, என் ஊரைச் சேர்ந்தவனோ, அல்லது என் தெருவைச் சேர்ந்தவனோ, அல்லது என் சொந்த அண்ணன் தம்பியே அந்த நாய்ப்பிழைப்பில் ஈடுபட்டிருக்கும் பட்சத்திலும், நான் ஹிந்தி மொழியைக் கற்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. அல்லது, நாளைக்கு நான் அந்த நாய்ப்பிழைப்பிற்கு வரும்போது எனக்கு ஹிந்தி தேவைப்படும் என்று எனது பள்ளிக் கல்வியில் எனக்கு ஹிந்தி கற்றுத் தருவது, என் மீதான பாசம், பற்றுதல். அக்கறை சார்ந்தது அல்ல. என்னை அந்த நாய்ப் பிழைப்பிற்கு தயார் படுத்தும் முயற்சியே ஆகும். இந்தியாவிற்கான ஆட்சிக்கு அந்த இனத்தில் இருந்து ஒருவன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற வகைக்காக நான் அவனது ஹிந்தி மொழியைக் கற்க வேண்டும் என்றால் நான் எவனுக்குமான கொத்தடிமையும் இல்லை என்று உரக்கச் சொல்வது என்கடமை. எனக்கு உன்னுடைய ஆட்சியும் வேண்டாம், நான் உனக்கு வரியும் தரவில்லை என்று சொல்ல உரிமை இருக்கிறது. நமக்காக பேசுகிறேன் என்று நாம்தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் இந்த வகையானவர்களை யெல்லாம், கூடுதலாக திட்டி தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்று அவருக்கு நம்முடைய தமிழ் உரிமையோடு வேண்டுகோளை முன் வைக்கிறோம். ஹிந்தி மொழியைத் தாய்மொழியாக கொண்டவர்களை விட வங்காளி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிக நெருக்கத்தில்தான். வங்காள மொழி தமிழ், சம்சுகிருதம் உள்ளிட்ட மொழிகளிலிருந்து கிளைத்த மொழி. ஹிந்தி மொழியோ, முழுக்க முழுக்க உருது மொழிதான். பாரசீகப் படையெடுப்பில், அன்றைய காலக்கட்டத்து நாய்ப்பிழைப்பாளர்கள் உருதை ஏற்றுக் கொண்டதால் உருவான மொழி ஹிந்தி. ஆக மொத்தம், நாய் பிழைப்பு என்பது, வரலாறு அங்கீகரித்த வாழ்க்கை முறைதான்! எந்த நாய்களும்: எங்கள் எசமானர் மிகமிக நல்லவர். அவர் மடியில் எல்லாம் ஏறி விளையாடுவேன். நான் கடித்தாலும் அவருக்கு ஒன்றும் பாதிக்காது; அதற்காக எனக்கு நஞ்சு முறிவு ஊசி போட்டிருக்கிறார் எசமானர். நான் தெரு நாய்களோடு ஓடி விடாமல் இருக்க எனக்கு ஆண்மை அழிப்பு ஊசியெல்லாம் போட்டிருக்கிறார் எசமானர். ஏன்றெல்லம் பெருமை கொள்ளும். அவையெல்லாம் அதுகளுக்கான பெருமையாக இருந்து விட்டு போகட்டுமே. இந்த நிலையில் வங்காள மக்களின் பொறுப்பின்மையால், ஹிந்தி திணிப்புக்கு எதிரான போரில், வங்காளிகளுக்குமாகச் சேர்த்து கூடுதல் உழைப்பை போட வேண்டியிருக்கிறது நமக்கு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,171.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.