பதவியேற்று இரண்டாவது நாளிலேயே மோடி பாஜக அரசு அடாவடியைத் தொடங்கியுள்ளது. புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டமாம். ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் கட்டாயமாக ஹிந்தி கற்க வேண்டுமாம். ஏதற்கு இந்த மூடத்தனமான விளையாட்டு? கமல் காட்டமான அறிவுரை. 18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: 'நான் ஹிந்தி படத்தில் நடித்தவன். எதையும் திணிக்க கூடாது என்பது என்னுடைய கருத்து, விருப்பமுள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்' என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடுவண் அரசு, ஹிந்தித் திணிப்புக்காக ஒரு கல்விக் கொள்கையை தயாரித்துள்ளது. இந்தக் கொள்கை வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நடுவண் அரசின் இந்த முடிவை எதிர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 'நான் ஹிந்தி படத்தில் நடித்தவன். எதையும் திணிக்க கூடாது என்பது என்னுடைய கருத்து, விருப்பமுள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்' என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பணப் பரிமாற்றத்திற்கு ரூபாய்தாள் வேண்டாம் எண்ணிம பரிமாற்றம் என்று கணினி தொழில் நுட்பத்தை பாராட்டும் மோடி அரசு- -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,170.
வாக்குச்சீட்டு முறை வேண்டாம், மின் வாக்கு பதிவு எந்திரங்களை பயன் படுத்தலாம் என்கிற கணினி தொழில் நுட்பத்தை பாராட்டும் மோடி அரசு-
கூகுள் மொழிபெயர்ப்பில் உலக மொழிகளையெல்லாம் மொழி பெயர்த்துக் கொள்ள முடியும். உலக மொழிகள் அனைத்தையும் பேசியவுடனே மொழிபெயர்க்கும் ஏழாயிரம் கருவிகளை கணினி தொழில் நுட்பம் உருவாக்கி வருகிறது. அதை பயன்படுத்திக் கொள்ள கல்வித் திட்டத்தில் ஆக்கங்களை உருவாக்காமல், இந்தியாவில் பிறந்த மானங்கெட்ட தனத்திற்காக, தாய் மொழியில்லாமல் இன்னொரு மொழியான ஹிந்தியை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்கிற பிற்போக்குத் தனத்தை மட்டும் பாஜகவினர் விட மறுப்பதன் நோக்கத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.