அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் வருகைக்காக ஏற்பாடுகள் தீவிரம். முதலாவதாக, அகமதாபாத்தில் மோட்டேரா திடலில் பேரளவாய் நடைபெற உள்ள “வணக்கம் ட்ரம்ப்” நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப். 10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய வருகையில், மாமல்லபுரத்தை தெரிவு செய்தவர்கள் சீன அதிபர் வட்டாரத்தினர். காரணம்: தமிழர் சீனர் கடந்த கால வரலாற்றுப் பெருமையை உலகினருக்குப் பறை சாற்றும் நோக்கம் பற்றியதானது. அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் வட்டாரம் தாஜ்மகாலை தெரிவு செய்து, அதற்கான திட்டமிடல் இந்தியாவில் நடந்து வருகிறது. நோக்கம் பின்னர் தெரியவரலாம். வரும் திங்கட் கிழமை நண்பகல் 12 மணிக்கு இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப். அகமதாபாத்தில் மோட்டேரா திடலில் பேரளவாய் நடைபெற உள்ள “வணக்கம் ட்ரம்ப்” நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப். அதன்பின் மாலை 4.30 மணிக்கு ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்று பார்வையிட உள்ளார். டொனல்ட் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவான்கா ட்ரம்ப் மற்றும் மறுமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் தாஜ்மகாலை சுமார் 30 நிமிடங்கள் பார்வையிட உள்ளனர். டிரம்புடன் ஆக்ராவுக்கு பிரதமர் மோடியும் வரக்கூடும் என்ற செய்திகள் குறித்து கேட்டபோது, அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று அதிகாரப்பாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான நோக்கம் இணையத்தில் இனி பகடியாடப்படலாம். அமெரிக்க அதிபரும் மற்றும் அவரது குடும்பத்தினரும் வரலாற்று அடையாளம் தாஜ்மகாலைப் பார்க்க தகுந்த முறையில் பார்வையிட வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இதற்காக இந்தியாவைச் சேர்ந்த மூத்த அதிகார்கள் யாரும் உடன் இருக்க எந்த திட்டமிடலும் இல்லை என்று அதிகாரப்பாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



