Show all

பயணமாகும் மோடி! குமரிக்கண்ட காலமுதல் சோழர்காலம் வரை தமிழர் மண்ணாக இருந்த மாலைத்தீவு, மற்றும் இலங்கைக்கு

மோடி தனது முதலாவது வெளிநாட்டுச் சுற்றுபயணமாக மாலைத்தீவு செல்லவிருக்கிறார். மாலைத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குமரிக்கண்ட காலமுதல் சோழர்காலம் வரை தமிழர் மண்ணாக இருந்த மாலைத்தீவு, சிங்களர், அராபியர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரித்தானியர், சூல்தான் ஆட்சி, குடியரசு, நீண்ட நெடுங்காலத்திற்கு பின்னதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என மாலைத்தீவு பலரிடம் கைமாறிக் கொண்டிருந்தது. 

மாலைத்தீவு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா தனது விமான மற்றும் கடல் படைகளை அனுப்பி மாலைதீவு மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு மாலைதீவைக் கைப்பற்றியது. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திடம் இருந்து மாலைதீவை மீட்கும் அதிரடி நடவடிக்கையை கற்றாளை படை நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொண்டது இந்திய ராணுவம். துற்போது சீனாவின் கழுகுப் பார்வை மாலைத்தீவின் மீது படிந்திருக்கிறது.

கடந்த முறை தலைமை அமைச்சராகப் பதவியேற்றதில் இருந்து 44 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் நரேந்திர மோடி. இந்த முறை தலைமை அமைச்சராகப் பதவியேற்றதில் தொடங்கி, மாலைத்தீவுக்கு முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத் திட்டத்தை வகுத்திருக்கிறார் மோடி. 

இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் மோடியை, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நேற்று சந்தித்து உரையாடினார். அப்போது, மீண்டும் தலைமைஅமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மோடிக்கு சிறிசேனா தனது வாழ்த்துக்களை கைகுலுக்கி தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

வருகிற வெள்ளி, சனி, ஞாயிறு மோடி மாலைத்தீவு பயணத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் மாலைத்தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அங்கு சீனாவின் கை ஓங்கும் வகையில் உள்ளது. இந்த நிலையில் மோடி அங்கு செல்வது முதன்மைத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தெரிய வந்துள்ளது. 

மாலைத்தீவு மற்றும் இலங்கையை சீனா ஆதிக்கம் செலுத்த நினைத்த காரணம் பற்றியே, விடுதலைப் புலிகளை அழித்து தமிழீழம் அமைவதைத் தடுத்து இலங்கைக்கு ஒத்துழைத்தது சீனா. தமிழீழம் அமைவதை தடுக்கும் நடவடிக்கையில் சீனாவோடு கைகோர்த்து இலங்கைக்கு ஒத்துழைத்த இந்தியா, தற்போது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, மாலைத்தீவு மற்றும் இலங்கை மீதான சீனா ஆதிக்கத்தை தடுக்க நினைக்கிறது. இந்திய வெளியுறவுக் கொள்கையை காங்கிரஸ் ஆண்ட காலத்திலும் சரி, பாஜக ஆட்சி காலத்திலும் சரி, பார்ப்பனிய சக்திகளே தீர்மானிக்கின்றன. தற்போது புதிய அமைச்சரவையில், வெளியுறவு துறைக்கு முன்மொழியப் பட்டிருக்கிற அமைச்சரும் பார்ப்பனியரே. 

இந்தியப் பாதுகாப்பில் உலகளவில் எந்த இடத்திலும். எந்த வகையிலும் தமிழர் இடம் பெற்றால், ஆதிக்கப் பார்ப்பனியம் வீழ்த்தப் பட்டு விடுவோமோ! என்ற அச்சத்தில், உலகின் எந்த மூலையிலும் தமிழர் அதிகாரம் பெறுவதற்கு மிகப் பெருந்தடையை உருவாக்குகின்றனர் பார்ப்பனிய சக்திகள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,170.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.