மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழ் பேசத் தெரிந்த இருவரில் ஒருவர்: பழையவர். நிர்மலா சீதாராமன். மற்றவர்: அரசியலுக்கே புதியவர். சுப்பிரமணியம் ஜெய்சங்கர். முன்னவருக்கு நிதித்துறை. பின்னவருக்கு வெளியுறவுத் துறை. 17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கவனிக்கத்தக்க நபர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் அந்த பொறுப்பேற்றுக் கொண்டவுடன் சர்ச்சைக்குரிய தெய்வானி கோப்ரகடே வழக்கை இவர் கையாள வேண்டியிருந்தது. இந்திய வெளியுறவு அதிகாரியாக அமெரிக்காவில் பணியாற்றி வந்த தெய்வானி, விசா மோசடி குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டார். அவரை விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதில் ஜெய்சங்கருக்கு முதன்மை பங்குள்ளது. அதே போல குஜராத் கலவர வழக்கையடுத்து அமெரிக்காவுக்குள் நுழைய மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை தலைமை அமைச்சராக மோடி பொறுப்பேற்றுக் கொண்ட போது, அத்தடை நீக்கப்பட்டு, முதல் முறையாக அமெரிக்கா சென்றார். மோடியின் அமெரிக்க பயணித்திற்கு திட்டமிட்டதோடு, அங்கு அவரை வரவேற்று, இந்திய அமெரிக்க மக்களோடு விருந்து ஏற்பாடு செய்திருந்தார் ஜெய்சங்கர். தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், 25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5056 ஞாயிற்றுக் கிழமை (09.01.1955) டெல்லியில் பிறந்தார். ஜெய்சங்கரின் மனைவி க்யோக்கோ ஜெய்சங்கர், ஜப்பான் நாட்டை சேர்ந்தவர். ஜெய்சங்கர், உலகம் முழுவதும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஜெய்சங்கருக்கு தமிழ், ஆங்கிலம், ரஷ்யன், மேண்டரின், ஹிந்தி, ஆகிய மொழிகள் தெரியும். இவர் 31 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை ராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது, இந்தியாவின் அமைதி காக்கும் படை என்ற பெயரில் விடுதலை புலிகளை ஒடுக்குவதற்காக, இலங்கையின் நட்பு படையாக சென்ற படையணியின் செயலாளரகவும், அரசியல் ஆலோசகராகவும் ஜெய்சங்கர் செயல்பட்டார். மன்மோகன் சிங் தலைமை அமைச்சராக இருந்தபோதும் வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்புக்காக பரிந்துரைக்கப்பட்டவர் இந்த ஜெய்சங்கர். மோடி பதவி எற்ற ஆடுத்த ஆண்டு, இந்தியாவின் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெய்சங்கர். கடந்தாண்டு டாடா குழுமத்தின் உலகளாவிய கார்ப்பரேட் விவகாரங்களின் தலைவராக பணியாற்றினார். மோடியின் அமைச்சரவையில் உள்ள அரசியல் சாராத ஒரே நபர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். அடுத்து நிர்மலா சீதாராமன். இவரின் தாய்வழித் தாத்தா முசிறியைச் சேர்ந்தவர் என்பதால் இவர் தமிழ்நாட்டுப் பெண் ஆவார். இவர் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். தமிழக மீனவர்களை ரொம்ப ரொம்ப பாதுகாத்து வந்தார். தமிழக மீனவர்களிடம் இலங்கை இராணுவம் அத்து மீறிய போதெல்லாம் இலங்கை இராணுவத்தை ஓட ஓட விரட்டினார் என்று சொல்லலாம் என்றால் அதற்கெல்லாம் இவர் எந்த வாய்ப்பும் தரவில்லை. தற்போது இவர் நிதி அமைச்சராக முன்மொழியப் பட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,169.
சுப்பிரமணியம் ஜெய்சங்கர். இவர் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தவர். ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



