Show all

மண்ட பத்திரம் இம்ரான்கான்! வாத்தோடு வாத்தாக கொரோனா நுண்ணுயிரி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாகிஸ்தானுக்கு வரும் சீன வாத்துப்படை

கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு  படையெடுத்துள்ளதாக கூறப்படும், வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க பாகிஸ்தானுக்கு உதவ வருகிறதாம் சீன வாத்துப்படை.

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாகிஸ்தான் நாட்டின் தெற்கு மாநிலமான சிந்து முதல் வடகிழக்கு மாநிலமான கைபர் பக்துவா வரையிலான பல்வேறு பகுதிகளில் வேளாண்பெருமக்கள பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்ட பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருவதாக அறியமுடிகின்றது. 

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்துள்ளதால் லட்சக்கணக்கான ஹெக்டெர் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான உழவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்களாம்.
 
கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு  படையெடுத்துள்ளதாக கூறப்படும், இந்த வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  

வெட்டுக்கிளி  படையெடுப்பை தடுப்பதற்கு  உதவுவதற்காக சீனா சிறப்பாக வளர்க்கப்படும் ஒரு இலட்சம் வாத்துகளை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறது. இதனை பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான்கான் தெரிவித்து உள்ளார்

சீனாவிலிருந்து பாகிஸ்தான் புறப்பட வாத்து இராணுவம் தயாராக உள்ளது என்று ஜிஜியாங்கிலிருந்து நிங்போ செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

ஜி ஜியாங் வேளாண் அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளரான லு லிஷி, கோழிகளுடன் ஒப்பிடும்போது வாத்துகள்  வெட்டுக்கிளிகளுக்கு ஆபத்தான எதிரி. வாத்துகள் குழுக்களாக வாழ விரும்புகின்றன. கோழிகளை விட நிர்வகிக்க மிகவும் வசதியானவை. ஒரு கோழி ஒரு நாளைக்கு 70 வெட்டுக்கிளிகளை சாப்பிடலாம், ஒரு வாத்து 200 க்கும் மேற்பட்டவற்றை சாப்பிடலாம், இது மூன்று மடங்கு போர் திறனைக் கொண்டுள்ளது என்று விளக்கினார்.

எல்லாம் சரிதான். உங்களுக்கு வாத்து இராணுவ உதவிக்கு வேறு நாடே கிடைக்கவில்லையா? அவனவன் சீனாவில் இருந்து மனிதர்களை ஏற்றுக் கொள்வதற்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறான். கையாள்கிற பணத்தாள்கள் மூலம் கொரோனா தொற்று பரவலாம் என்று பணத்தாள்களை சேகரித்து எரித்துக் கொண்டிருக்கிறது சீனா. நீங்கள் வரவழைப்பது வாத்து இராணுவமாக இல்லாமல், வாத்தோடு வாத்தாக இணைந்து கொண்ட கொரோனா தெற்றாக இருந்து விடப்போகிறது. 

மண்ட பத்திரம் இம்ரான்கான்! நீங்களே உங்களின் நாட்டின் மீதான உயிரிப்போர் (பயோ வார்) இராணுவத்திற்கு கதவைத் திறந்து வைத்து விடாதீர்கள். நாங்களும் மாட்டிக் கொள்வோம். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.