திருச்சி திருவானைக்காவலில் உள்ள, சிவன் சக்தி கோயில் மாமன்னர் கோச் செங்கட் சோழனால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் தோட்டப் பகுதியில் தங்கப்புதையல் ஒன்று கண்டெடுக்கப் பட்ட நிலையில் இந்தக் கோயில் குறித்த இணையத்தேடல் எண்ணிக்கை கூடிக் கொண்டேயிருக்கிறது. காரணம் தங்கப் புதையல். 15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கரிகாலன் உள்ளிட்ட முற்காலச் சோழர் மரபைச் சார்ந்தவர் கோச் செங்கட் சோழன். இவருடைய காலம் தமிழ்தொடர்ஆண்டு-2950 (கிறித்துவுக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு) எனக்கருதப்படுகிறது திருச்சி திருவானைக்காவல் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள கொட்டாரம் 100 கால் மண்டபம் அருகே உள்ள காலி இடத்தை தூய்மை செய்து அங்கு வாழைக்கன்றுகள் நடவும், பூச்செடிகள் வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணியில் நேற்று கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடப்பாறை, மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களால் குழி தோண்டிய போது, வேறுபாடான உலோகத்தில் பட்டது போன்று ஒலி எழுந்த நிலையில், அதனை மெதுவாக தோண்டியபோது, செம்பு பெட்டகம் ஒன்று தென்பட்டது. அந்த பெட்டகத்தை எடுத்து பார்த்தபோது, அதில் தங்கக்காசுகள் இருப்பது கண்டு அனைவரும் வியப்பு அடைந்தனர். இது குறித்து ஊழியர்கள், கோவில் நிர்வாக அதிகாரி மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெட்டகத்தில் 504 தங்கக்காசுகள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அவற்றில் ஒரு தங்க காசு மட்டும் 10 ரூபாய் நாணயம் அளவிலும், மீதமுள்ள தங்க காசுகள் சட்டைப் பித்தான் அளவிலும் இருந்தன. இது 1 கிலோ 704 கிராம் எடைகொண்டதாகும். இதன் மதிப்பு ரூ.61 லட்சம் ஆகும். ஒவ்வொரு தங்க காசும் 3.3 கிராம் எடை உள்ளது. ஒன்று மட்டும் 10 கிராம் எடை உள்ளது என கூறப்படுகிறது. இதன் பின்னர் அதிகாரிகள் முன்னிலையில், தங்கக்காசுகள் ஒரு பெட்டகத்தில் வைத்து பூட்டி முத்திரை வைக்கப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. தங்கக்காசுகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது தற்போது தெரியவில்லை. தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகே அது, எந்த காலக்கட்டத்தை சேர்ந்தது என தெரிய வரும் என்று கோவில் நிர்வாக அதிகாரி மாரியப்பன் தெரிவித்தார். திருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கிடைத்தது வியப்பை ஏற்படுத்திய நிலையில், காலியான இடத்தை முழுமையாக தோண்டி, வேறு ஏதாவது கல்வெட்டுகள், வேறு தொன்மையான பொருட்கள் கிடைக்குமா என்று ஆய்வு செய்திட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருச்சி திருவானைக்காவலில் உள்ள, சிவன் சக்தி கோயில் மாமன்னர் கோச் செங்கட் சோழனால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் தோட்டப் பகுதியில் தங்கப்புதையல் ஒன்று கண்டெடுக்கப் பட்ட நிலையில் இந்தக் கோயில் குறித்த இணையத்தேடல் எண்ணிக்கை கூடிக் கொண்டேயிருக்கிறது.
திருவரங்கம் வட்டாட்சியர் சிரிதர், மண்டல துணை வட்டாட்சியர் ரவி, வருவாய் ஆய்வாளர் திலகவதி, கிராம நிர்வாக அதிகாரி அருண்பிரியா மற்றும் காவல்துறை துணைஆய்வாளர் இராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் செம்புக்கலத்தில் இருந்த தங்கக்காசுகள் எடுத்து எண்ணப்பட்டன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



