தலைமைஅமைச்சர் அவர்களே! கொஞ்சம் கூடுதல் பணத்தையும், கூடுதல் மருத்துவர் மற்றும் செவிலியர்களையும், கூடுதல் கவனத்தையும் களமிறக்குங்கள். இந்தியாவில் கொரோனா பாதிப்பு, குணமளிப்பு, மரணிப்பு ஆகியவைகள் நமக்கு தெரிவிக்கும் பாடம் இதுவே. 17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா பதிப்பு 1071ல் குணமடைந்தவர்கள் 100பேர்கள் என்கிற நிலையில் நமது இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் முயற்சியால் 9.34 விழுக்காட்டினரை குணப்படுத்தும் மருத்துவத் தகுதி அல்லது மருத்துவ முறை பெற்றிருப்பதாகக் கொள்ளலாம். மரணித்தவர்கள் 29பேர்கள். என்கிற நிலையில் 2.7 விழுக்காட்டினர் நோய் எதிர்ப்பு தகுதியின்மை அல்லது இந்தியாவின் வறுமையை பிரதிபலிப்பவர்கள் என்பதாகக் கொள்ளலாம். உலகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா பதிப்பு 7,20,117ல் குணமடைந்தவர்கள் 149082 பேர்கள் என்கிற நிலையில் உலகின் பலநாடுகளின் சராசரி முயற்சியால் 20.7 விழுக்காட்டினரை குணப்படுத்தும் மருத்துவத் தகுதி அல்லது மருத்துவ முறை பெற்றிருப்பதாகக் கொள்ளலாம். மரணித்தவர்கள் 33925 பேர்கள். என்கிற நிலையில் 4.71 விழுக்காட்டினர் நோய் எதிர்ப்பு தகுதியின்மை அல்லது உலகின் வறுமையை பிரதிபலிப்பவர்கள் என்பதாகக் கொள்ளலாம். இந்தக் கணக்கீட்டு அடிப்படையில் பார்க்கும் போது, உலக மக்களை விட இந்திய மக்களின் நோய்எதிர்ப்பு சிறப்பாகவே இருக்கிறது. வறுமை நிலைகூட உலகினரை விடக் குறைவாகவேயுள்ளது என்று அறிய முடிகின்றது. ஆனால் கொரோனாவில் இருந்து நாம் நமது மக்களை மீட்டெடுப்பதில் மருத்துவத் தகுதி அல்லது மருத்துவ முறை குறைவாகவே தென்படுகிறது என்பது உறுதியாகிறது. நமது நாட்டில் கொரோனாவிற்கு முன்னெடுத்துக் கொண்டிருக்கிற மருத்துவ முறை பெரும்பாலும் அல்லோபதியே. அதிக குணமளிப்பைக் கொடுத்திருக்கிற சீனா- மரபு மருத்துவர்களை பெரும்பான்மை களமிறக்கியதாக அறிய முடிகின்றது. நமது மருத்துவத் தகுதி என்பது கொரோனாவை எதிர்கொள்ள நமது நாடு முன்னெடுக்கிற மருந்து என்கிற ஒன்று மட்டுமே ஆகாது. தனிமைப்பாட்டிற்கான வசதிகள், மருத்துவக் கருவிகள், மருத்துவர் செவிலியர் எண்;ணிக்கை, தொடர் பேணுதல், நோயாளிக்கு நம்பிக்கையூட்டுதல் எனப் பல காரணிகள் ஆகும். ஆக இந்தியா இவற்றை சிறப்பாக மேம்படுத்த வேண்டியது கட்டாயம் என்பது நமது இந்தியாவோடு உலகத்தை ஒப்பிட்டு போட்டுப்பார்த்த கணக்கில் தெரிய வருகிறது. தலைமைஅமைச்சர் அவர்களே! கொஞ்சம் கூடுதல் பணத்தையும், கூடுதல் மருத்துவர் மற்றும் செவிலியர்களையும், கூடுதல் கவனத்தையும் களமிறக்குங்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



