Show all

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வேண்டுகோள்! தலைமைஅமைச்சருக்கு அழுத்தமாக பதிவிட்டுள்ள இரண்டு சேதிகள்

இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு, கொரோனா பரவல் தடுப்புக்கு, மக்கள் தளத்திலிருந்து தான் அறிந்து கொண்ட ஆலோசனைகளாக பலவற்றை தெரிவித்து, ஒரு நீண்ட மடல் எழுதியுள்ளார் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள்.  அதில் அவர் பதிவிட்டுள்;ள அழுத்தமான இரண்டு சேதிகள்.

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒன்று:- நான்கு மணிநேர அவகாசத்தில் ஊரடங்கை அறிவித்துவிட்டீர்கள். எந்த முன்னேற்பாட்டினையும் அரசின் எந்த துறையும் செய்திராத பொழுது, தனிமனிதன் என்ன செய்திருக்கமுடியும்? உங்கள் அமைச்சகத்தில் உள்ள வாகன ஓட்டுநர்களின் குடும்ப உறுப்பினர்கள் எங்கெங்கு சிக்கினார்கள் என்பதைக் கேட்டாலே போதுமே? நிலமையின் விபரீதம் முழுமையும் புரியும். தில்லியின் ஆனந்த விகாரிலும் காசர்கோட்டின் தொழிற்கூடத்திலும், திருப்பெரும்புதூரின் ஊர் விளிம்புகளிலும் சொந்த ஊருக்கு எப்படித் திரும்புவது என விழிபிதுங்கி ஒட்டிய வயிறுடன் இலட்சக்கணக்கானோர் நிற்கின்றனரே. ஒட்டிய வயிற்றில் ஒருவேளை அந்த பாதகக் கிருமியும் ஒட்டியிருந்தால் இந்த பரவல் தடுப்பு உத்தியே பாதாளத்துக்குப் போய்விடுமே! உங்கள் ஆலோசனைக்குழு என்ன செய்யப்போகின்றது? 

இரண்டு:- நாற்பத்தி ஐந்து கோடி இந்தியர்கள் அன்றாடம் கூலிவேலை செய்து பிழைப்பவர்கள். அவர்களின் கால்களை வயிற்றோடு இறுக கட்டும் முடிவை நீங்கள் அறிவித்தபோது, அது ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி எத்தனை நூறு கேள்விகளுக்கு உங்களின் அமைச்சகம் விடைகண்டறிந்திருக்க வேண்டும். ஆனால் எந்த விடையையும் நீங்கள் இன்றுவரை சொல்லவில்லையே. காட்டுத்தீ எரியத்தொடங்கும் போது மௌனம் எனும் காற்று நெருப்பை அணைக்காது; அதிகப்படுத்தவே செய்யும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.