Show all

இன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் பாய்ச்சல் நாள்! பிப்பரவரி29

இன்று பாய்ச்சல் நாள். இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும். உலகம் முழுவதும் பெரிதாக நடைமுறையில் இருக்கிற இந்தக் கிரிகேரியன் ஆண்டு முறையில் ஆண்டுக்கு 365.25 நாட்கள் எனக் கணக்கிடப்பட்டு அந்த 0.25, 0.50, 0.75 எனத் துண்டு விழும் நாட்களை நான்காவது ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு 29நாட்கள் அமைத்து கொண்டு நிறைவு செய்கின்றார்கள்.

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று பாய்ச்சல் நாள். இது தாவல் நாள் என்றும் அழைக்கப்படுகின்றது. இது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். உலகம் முழுவதும் பெரிதாக நடைமுறையில் இருக்கிற இந்தக் கிரிகேரியன் ஆண்டு முறையில் ஆண்டுக்கு 365.25 நாட்கள் எனக் கணக்கிடப்பட்டு அந்த 0.25, 0.50, 0.75 எனத் துண்டு விழும் நாட்களை நான்காவது ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு 29நாட்கள் அமைத்து கொண்டு நிறைவு செய்கின்றார்கள்.

ஆனால் தமிழர்கள் இதே ஆண்டுக்கணக்கை 365 நாட்கள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பறை என்று 5120 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியிருக்கின்றார்கள். தமிழர் தம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் இந்த 365 நாட்கள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பறை முடிக்கப்படுகிறதோ அந்த நாளின் அந்த நேரத்தில் தமிழர்க்கு அடுத்த புத்தாண்டு ஆகும். ஆக தமிழர் அந்த துண்டு விழும் நாளை அந்தந்த ஆண்டில் முடித்துக் கொள்கின்றார்கள். ஆனால் இது தமிழ் ஆண்டுக் கணக்கின் சிறப்பு என்ற போதும், கிரிகேரியன் ஆண்டு போல எளிமைப்பாடு இல்லாத காரணத்தால், இந்த ஆண்டுக் கணக்கை தமிழர்கள் தங்கள் விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியாமல், காலந்தேர், பஞ்சங்கம் ஆகியவற்றை பார்த்தே நாளைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எழுகிறது. அந்த முயற்சி சோம்பலால் தமிழர்கள் பெரும்பாலான தமிழர்கள் தமிழ்ஆண்டுக் கணக்கையே முன்னெடுக்காமல் கிரிகேரியன் ஆண்டிலேயே தொடர்கின்றார்கள்.

உலகம்- தமிழர் ஆண்டுக்கணக்கு நாள்தான் துல்லியமானது என்ற நிலையில், இந்த 365.25 நாள் அமைப்பு முறையையும் அவ்வப்போது சரி செய்து வருகிறது. அந்த வரலாற்றை இங்கு பார்ப்போம்:-

கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த உரோமானிய நட்காட்டியில் சனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, சூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், (நவம்-ஒன்பது) திசம்பர் (தசம்-பத்து) எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே சூலை மற்றும் ஆகத்து மாதங்கள் சேர்க்கப்பட்டன. 

எசுப்பானியா, போர்ச்சுக்கல், போலந்திய இலிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரேக்கம் ஆகும். 1923 பிப்ரவரி 15ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.

கிரிகேரியன் வருடமானது ஐரோப்பியக் காலண்டர்படி 365நாள் என்று ஆதியில் கணிக்கப்பெற்று வந்தது. பின்பு வந்தவர்கள் இதில் ஒரு தினத்தில் சொற்ப பாகம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து சில திருத்தங்கள் செய்தனர். 
இந்த திருத்தத்தின் படி 400வருடத்திற்கு ஒருமுறை 3நாட்களும் சில நாழிகையும் அதிகப் பட்டு வந்தது. கிபி 1582இல் இந்த 3 நாள் மீதத்தின் வித்தியாசத்தைச் சரி படுத்த எண்ணி லீப் வருடகணித முறையைக் கொண்டு வந்தனர்.
கிபி1600,1700,1800ஆகிய ஆண்டுகளின் கடைசி வருடத்தை சாதாரண வருடமாகக் கணக்கிட்டு அதில் வரும் பிப்ரவரி மாதத்திற்கு29நாட்களாக மாற்றினர் இதனால் 3நாட்கள் வித்தியாசக் கணக்கு சரியாயிற்று. ஆனால் நாழிகைக் கணக்கில் கொஞ்சம் மிச்சமாக வந்தது இந்த மிச்சத்தால் 4000ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் வித்தியாசமாகும் என்று கணக்கிடப்பட்டது. கிபி1582ல் இப்படிச் செய்யப் பட்ட திருத்தத்தால் அதற்கு முன்னர் ஏற்கெனவே குறைந்து இருந்த 10நாட்களை சீர் படுத்துவதற்காக கிபி1582 அக்டோபர்4 ஆம் தேதிக்குப் பதிலாக 15ஆம் தேதியாக வைத்துக் கொள்ளப் பட்டது.
இந்தப் புதிய ஏற்பாட்டை கிபி1752ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைமுறைக்கு கொண்டு வந்த போது11 நாட்கள் பிந்தியிருந்தது ஆகவே அவர்கள் 1752ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதிக்குப் பதிலாக14 ஆம் தேதி என்று என்று கணக்கு வைத்துக் கொண்டார்கள். அதாவது 11தேதிகளைக் காலண்டரிலிருந்து அதிகமாகக் கிழித்துக் கொண்டார்கள். இதுவே ஆங்கில வருடக் கணக்கு முறையில் ஏற்பட்ட மாற்றங்களாகும். கிபி 2092-ஆம் ஆண்டில் இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்."

இந்தப் பிசுறுகள் எல்லாம் இல்லாமல் 5120 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெளிவாக கணிக்கப் பட்ட நமது தமிழ்ஆண்டு கணக்கு முறையைப் பெருமையோடு பின்பற்றி நிலைநிற்க, இந்தப் பாய்ச்சல் நாளில் உறுதியேற்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.