சடுதிவண்டி செல்ல தனிவழி இல்லை. அடிப்படை வசதிகள் அமைக்காமல் சுங்கச்சாவடிக் கட்டணமா? சுங்கம் வசூலிக்கத்தடை விதித்து உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை அதிரடி. 16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வண்டியூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நெடுஞ்சாலை ஆணைய விதிகளை மீறி இருப்பதாக புகார் எழுந்தது. மேலும் 27 கிமீ தூர இடைவெளியில் மூன்று சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். சடுதிவண்டி செல்ல தனிவழி இல்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் அடிப்படை வசதிகள் செய்துதரும் வரை வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்த தேவையில்லை என அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வண்டியூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றன. அறங்கூற்றுமன்ற உத்தரவின்படி அடிப்படை வசதிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என மாநில நெடுஞ்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



