நிறைய பேர்கள் பங்குகள் வாங்கினால் பங்கின் விலை உயரும். நிறைய பேர்கள் பங்குகளை விற்றால் பங்கின் விலை குறையும். இதுதான் பங்குச் சந்தையின் இயல்பு. நேற்று ஒரே நாளில் பலத்த அடிவாங்கியது இந்தியப் பங்குச்சந்தை. ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு. நிறைய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து விலகியதற்கு டெல்லி வன்முறை காரணமா? பேசுபொருளாகியிருக்கிறது. 17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நிறைய பேர்கள் பங்குகள் வாங்கினால் பங்கின் விலை உயரும். நிறைய பேர்கள் பங்குகளை விற்றால் பங்கின் விலை குறையும். இதுதான் பங்குச் சந்தையின் இயல்பு. நேற்று ஒரே நாளில் பலத்த அடிவாங்கியது இந்தியப் பங்குச்சந்தை. ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு. ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு என்கிற இந்த அடிவாங்கலில் இருந்து தெரிய வருவது: நிறைய பேர்கள் பங்குச் சந்தையில் கொஞ்சமான இழப்புடன் வெளியேறி, பங்குச் சந்தையில் இருப்பவர்களுக்கு ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் வரை சரிந்திருப்பது இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய சரிவாகும். இதற்கு முன்னர், நாளது 07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5117 அன்று (24.08.2015) மிகப்பெரிய அளவில் 1,624 புள்ளிகள் இறக்கத்தைச் சந்தித்திருந்தது. வணிகக் கிழமையின் இறுதிநாளான நேற்று இந்தியப் பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச்சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் அதாவது 3.6 விழுக்காடு சரிந்து 38,297 என முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தையின் நிப்ட்டி 431 புள்ளிகள் சரிந்து 11,201-ல் முடிவடைந்தது. இதன்காரணமாக, நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த முறையும் சீனாவின் பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இதற்குக் காரணமாக இருந்தது. தற்போதும் சீனாவின் கொரோனா தொற்றின் உலக அளவில் ஏற்பட்ட தாக்கமே இந்தியப் பங்குச்சந்தையைப் பெரிதும் பாதித்திருக்கும் என்று தெரிவிக்கின்றார்கள். இதற்கு முன்னர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சில நாட்கள் இந்தியப் பங்குச்சந்தை பெரிதான சரிவைச் சந்தித்திருந்தது. அதன் பிறகு தற்போது மிகப்பெரிய அளவிலான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தலைநகர் டெல்லியில் குடியுரிமைத் திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள்மீது நிகழ்த்தப்பட்ட கலவரத்தால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மனதில் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்பதே பங்குசந்தை சரிவிற்கு உறுதியான காரணமாக இருக்கக் கூடும். கொரோனா தொற்று பாதிப்பு என்ன, இந்தக் கிழமையா பெரிதாக தாக்கம் காட்டியது என்கின்றனர் பலர். இதுதான் காரணம் என்றால்- ஏற்கெனவே பொருளாதார மந்த நிலையில் இந்தியா சிக்கியுள்ள நிலையில் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய இழப்பு, முதலீட்டாளர்கள் நடுவில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் சந்தை- சரிவிலிருந்து மீளுமா என்பது வரும் திங்களன்று தொடங்கும் வணிக நாளில்தான் தெரியவரும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



