Show all

பிரிட்டனின் மான்செஸ்டரில் திடல் ஒன்றில் நேற்று இரவு குண்டுவெடிப்பு

பிரிட்டனின் மான்செஸ்டரில் திடல் ஒன்றில் நேற்று இரவு அமெரிக்க இசை கலைஞர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது முடிந்ததும் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.

      தற்கொலை பயங்கரவாதி நடத்தியதாக கூறப்படும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு கூறவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு கூறியது. மான்செஸ்டர் காவல்துறையும் இச்சம்பவத்தை பயங்கரவாத தாக்குதலாகவே கருதுகிறது. இதுதொடர்பாக எந்தஒரு கைது நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

      காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. பின்னணி என்ன என்பதையும் வேகமாக ஆராய்ந்து வருகிறது.  விசாரணையில் இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு படை, உளவுத்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

      இந்நிலையில் பிரிட்டனில் நடத்தப்பட்ட தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது தெரியவந்து உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கீச்சு கணக்குகளில் மான்செஸ்டர் தாக்குதல் தொடர்பான ஹஷ்டாக் உடன் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது எனவும் இதுபோன்ற தாக்குதலை மேலும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் கண்காணிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

      கீச்சு கணக்குகளில் ஈராக் மற்றும் சிரியாவில் நடத்தப்படும் வான் வழி தாக்குதலுக்கு பதிலடிதான் இந்த தாக்குதல் என செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.

 

      ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு உள்ள உலக நாடுகள் படையில் பிரிட்டனும் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.