Show all

செய்தி வாசிப்பாளராக பெண் போன்ற உருவ அமைப்பிலான இயந்திரமனுசி! சீனாவில்; உலகிலேயே முதல் முறையாக

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி ஒளிபரப்பு வரிசை, பெண் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட இயந்திர மனுசியை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தி உள்ளது. இந்த இயந்திர மனுசி பீஜிங்கில் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கும் தலைவர்கள் குறித்த செய்திகளை வாசித்தது. 

இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர மனுசி மனிதர்களைப் போல முக பாவனைகள் மற்றும் செயல்களை அப்படியே செய்யும் திறன் கொண்டது. இந்த இயந்திர மனுசிக்கு சின் சியாமெங் என பெயரிடப்பட்டுள்ளது. சிறிய காதணிகள், இளஞ்சிவப்பு நிற உடை அணிந்து, முடி போன்றவை சாதாரண பெண் போன்று இயல்பாக அமைக்கப் பட்டுள்ளது.

சின்குவா ஒளிபரப்புவரிசை, செய்தி வாசிப்பாளர் கியூ மங் உருவத்தினை மாதிரியாக கொண்டு இந்த இயந்திர மனுசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெண் இயந்திர மனுசியை, சின்குவா செய்தி ஒளிபரப்புவரிசையும் சொகோவு எனும் தொழிநுட்ப நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. கடந்த ஆண்டு ஏற்கனவே ஆண்களை போன்ற வடிவமைப்பு கொண்ட 2 இயந்திர மனிதர்கள் செய்தி வாசிப்பாளர்களாக சீனாவின் உசென் பகுதியில் உள்ள ஒளிபரப்புவரிசையில் பயன்படுத்தப்பட்டது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,081.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.