17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவப் பாதுகாப்புடன், ஜாமர் வாகனம் புடை சூழ மிகுந்த பாதுகாப்பாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். விண்ணைப் பிளந்தன வரவேற்பு முழக்கங்கள். இந்திய எல்லையான வாகாவிற்கு அபினந்தன் அழைத்து வரப்பட்ட டொயோட்டோ வகை கறுப்பு வண்ண காருக்கு முன்னும் பின்னும், பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் அணி வகுத்தன. அந்தக் கார்களில் ஜாமர்களும் பொருத்தப்பட்டிருந்தன. ரிமோட் குண்டுகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் அல்லது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்திவிட கூடாது என்பதற்காக இவ்வாறு ஜாமர் வசதி கொண்ட பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ அபிநந்தன் அழைத்து வரப்பட்டார். இந்தியா-பாகிஸ்தான் நடுவே இணக்கமான சூழ்நிலை உருவாகிவிட கூடாது என்பதற்காக, தீவிரவாதிகளோ அல்லது சர்வதேச எதிரி நாடுகளோ, அபிநந்தன் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ எச்சரித்ததன் காரணமாக இவ்வாறு அபிநந்தனுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டது. போர்களம் கண்டு மீண்ட புறநானூற்று மறவனாக, கரிகால் சோழனோ, பாகிஸ்தான் படை கண்டு மீண்ட பாண்டியன் நெடுஞ்செழியனோ, கண்ணகிக்குக் கல் எடுத்து மீண்ட சேரன் செங்குட்டுவனோ என்று வியக்கும் வண்ணம் அடுத்த நாட்டு படையின் வெள்ளை கொடி பறக்க தேர் போன்ற கருப்பு வண்ண டொயோட்டோ வகை காரில் இந்தியத் தாயகத்திற்கு அழைத்து வரப் பட்டார் வீரத்தமிழன் அபினந்தன். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,078.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



