20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்துள்ளார். சென்னையை அடுத்த வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள விலங்குகளை பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் வங்கிகள், நடிகர்கள் போன்றோர் தத்தெடுத்து வளர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி: ஆதித்யா, ஆர்த்தி என்ற 2புலிகளை ஆறு மாதத்திற்கு தத்தெடுத்தார். மேலும் இவை இரண்டிற்கும் 6 மாதத்திற்கு தேவையான உணவுகளை வழங்குவதற்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை உயிரியல் பூங்காவின் அதிகாரியிடம் வழங்கினார் விஜய் சேதுபதி. இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி: நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது வண்டலூர் பூங்காவிற்கு வந்துள்ளேன். அப்போது இங்கு விலங்குகள் மிகவும் குறைவாக இருந்தன. ஆனால் தற்போது 2500 விலங்குகள் இருப்பதாகத் தெரிகிறது என்று தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,081.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



