Show all

கைல் ஜென்னர், உலக அளவில் 21 அகவை, இளம் பணக்காரர்! போர்ப்ஸ் இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகின் பணக்காரர்கள் பட்டியலை, அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் இதழ், ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இதில், இளம் அகவை பணக்காரர்கள் பட்டியலும் வெளியிடப்படுகிறது. 

இந்த வரிசையில், அமெரிக்காவைச் சேர்ந்த, கைல் காஸ்மெட்டிக்ஸ் என்ற அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய, கைல் ஜென்னர் என்ற இளம்பெண், இளம் அகவை பணக்காரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ், முகநூல் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் ஆகியோரும், ஏற்கனவே இடம்பிடித்திருந்தனர். மார்க் ஜுக்கர்பர்க், தன், 23வது அகவையில், இளம் பணக்காரராக தேர்வானார். ஆனால், கைல் ஜென்னர், 21வது அகவையிலேயே, இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு, 7,000 கோடி ரூபாய் என, போர்ப்ஸ் இதழ் மதிப்பிட்டு உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,088.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.