Show all

பரபரப்பில் ஆளும்கட்சியினர்! நடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள்; சிக்கிய காணொளிகள்; அதிர்ந்த காவல்துறையினர்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. பிரபலங்கள் பலர் இந்த பிரச்சனை குறித்து தற்போது குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். 

தொலைக்காட்சி தொடர்கள் பாணியில், பாலியல் குற்றப் பின்னணி கும்பல் ஒன்று சிக்கியிருக்கிறது. சமூக வலைதளங்கள் மூலமாக இளம் பெண்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, பின்னர் காதலிப்பதாக சந்திப்பை ஏற்படுத்தி, கும்பலாக முற்றகையில் ஈடுபட்டு, தவறான முறையில் நடந்த ஆதாரங்களை கணொளி எடுத்து, காணொளியை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, தொடர்ந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறது அந்தக் கும்பல். கடந்த ஏழு ஆண்டுகளாகவே.

இந்தப் பிரச்சனையில் சிக்கி தொடர் துன்பத்தை அனுபவித்து வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த சில நாட்களுக்கு முன் காவல்துறையில் புகாரை அளித்தார். 

சில இளைஞர்கள் தன்னை வஞ்சகமாக ஏமாற்றி தான் சம்பந்தப் பட்ட காட்சிகளை காணொளி எடுத்து மிரட்டி வருகிறார்கள் என்று புகார் அளித்து இருந்தார். 

இதையடுத்து பொள்ளாச்சி காவல்துறை தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்தது. இந்தத் தனிப்படை விசாரணையில் சபரி, வசந்த குமார், சதீஷ் குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

ஆனால் குழுவின் தலைவனான திருநாவுக்கரசு மட்டும் தப்பித்;து விட்டான். காவல்துறை வருவது தெரிந்து கொண்டு, பொருள் பலமும், பண பலமும் கொண்ட திருநாவுக்கரசு தப்பித்தான். அதன்பின் திமிராக காணொளி வெளியிட்ட திருநாவுக்கரசு, தனது குற்றங்களுக்கு பின் பலர் இருப்பதாக கூறினான். இதில் பலருக்கு தொடர்பு இருக்கிறது என்று திமிராக பேசி இருந்தான். 

இவனை காவல்துறையினர் சில நாட்களில் கைது செய்தனர். தற்போது காவல்துறையினர் இவனை தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். 

இவர்கள் பெண்களை திட்டமிட்டு ஏமாற்றி மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நண்பர்களின் உறவுக்கார பெண்கள், முகநூலில் இருக்கும் பெண்கள், கல்லூரி படிக்கும் பணக்கார பெண்களை நேரிலும் முகநூலிலும் தொடர்பு கொண்டு, நட்பாகி, பின் காதல் செய்வதாக ஏமாற்றி இருக்கிறார்கள். 

இவர்களுக்கு சொந்தமான சின்னப்பபாளையம் பண்ணை வீட்டில்தான் இத்தனை சம்பவங்கள் நடந்து இருக்கிறது. அங்கு காதலன், நட்பு என்ற போர்வையில் பெண்களை அழைத்து செல்லும் இவர்கள், பெண்களிடம் தவறாக நடந்து அதை காணொளியாக எடுத்து வைத்து மிரட்டி இருக்கிறார்கள். 

இதை செய்தது வெறும் நான்கு பேர் கொண்ட கும்பல் கிடையாது. இந்த கும்பலில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக இப்படி மோசமான குற்றச் செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் 5 கோடிக்கும் மேல் மோசடி செய்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. 

இப்படி பாதிக்கப்பட்டது 200க்கும் அதிகமான பெண்கள். அதேபோல் இவர்கள் பின்னணியில் அரசியல்வாதிகள் பலர் இருந்துள்ளனர். பெண்களை மிரட்டி அவர்களை அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையிலும் இவர்கள் ஈடுப்பட்டு இருந்தனர். கோவையைச் சேர்ந்த சில முதன்மை அரசியல் புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. 

இவர்களிடம் இருந்து காவல்துறையினர் இதுவரை 1500 காணொளிகளைக் கைப்பற்றி இருக்கிறார்கள். இதில் இருப்பது எல்லோரும் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் கண்ணீருடன் கதறும் காணொளிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. 

இந்தக் காணொளிகள் சமூக போராளிகளிடம் தற்போது சென்று சேர்ந்துள்ளது. இதனால் தற்போது இந்தப் பிரச்சனையை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. காவல்துறையினர் இதில் விசாரிப்பதில் மெத்தனம் காட்டுகிறது 

முதலில் புகார் அளித்த பெண்ணின் அண்ணனை நான்கு பேர் கொண்ட கும்பல் சில நாள் முன் மோசமாக தாக்கி இருக்கிறார்கள். பார் நாகராஜ், பாபு, செந்தில் குமார், வசந்த குமார் ஆகியோர் இந்த செயலை செய்துள்ளனர். அதிமுகவில் உள்ள பார் நாகராஜ் ஜெயலலிதா பேரவை செயலாளர். இந்த நிலையில் இவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களை ஆளும் தரப்பு காப்பாற்றுவதாக திமுக குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளை காப்பாற்ற போராடும் அதிமுக. ஸ்டாலின் கண்டனம்

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி நாகராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளாராம். ஐய்யயோ எவ்வளவு பெரிய தண்டனை. 

ஆந்தக் கும்பலை நடுத்தெருவில் விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள் பொதுமக்கள். எதற்கெடுத்தாலும் எகிறிக் கொண்டு வரும் தமிழிசை எங்கே போனார்? என்று இந்தப் பிரச்சனையில் தமிழிசையை அதிகம் இழுத்து விட்டு கருத்துப் படம் பதிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் இணைய ஆர்வலர்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,089.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.