Show all

உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது! ஸ்டாலின்

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நிருபர்களிடம் கூறினார்.

தமிழகத்தில் நீண்ட காலமாக 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. நேற்றைய தேர்தல் ஆணைய தேர்தல் அறிவிப்பில் 21 தொகுதிகளில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் எஞ்சிய 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் முதன்மை ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் பேசியதாவது:

வழக்குகளை காரணம் காட்டி ஒத்திவைப்பதாக கூறுவது சரியானது அல்ல. வழக்கு நடந்தால் தேர்தல் நடத்தக்கூடாது என்பது மரபு அல்ல. எவ்வித தடையும் இல்லாமல் தேர்தலை நிறுத்துவதில் உள்நோக்கம் இருக்கிறது. பழனிசாமி ஆட்சியை காப்பாற்ற தேர்தல் நடத்தாமல் சதி நடந்துள்ளது. திருவாரூர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது, பின்னர் நிறுத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படக்கூடாது.

தேர்தல் அதிகாரியை சந்தித்து நாங்கள் மனு அளிக்கவுள்ளோம். நியாயம் கிடைக்கவில்லை எனில் நாங்கள் அறங்கூற்றுமன்றத்தை அணுகுவோம். தேர்தல் ஆணையம் தேர்தல் நாள் அறிவிக்கும்போது வெயில், கல்லூரி, திருவிழாக்கள் என மனதில் வைத்துதான் தேர்தல் அறிவிப்பார்கள். மதுரை சித்திரை திருவிழா இருக்கும் நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்புவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

இவைகளுக்கு பதிலாக, வாக்குப் பதிவு எந்திரங்களை தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் உறுதியான நம்பகத்தன்மைக்கான  பெரிய வேண்டுகோளை முன்வைத்தால் ஏதாவது உருபடியான யோசனையாக இருக்க முடியும். சின்ன சின்ன காரணங்களுக்கு பெரியதொரு தன்னாட்சி அமைப்பின் மீது குற்றங்குறை தேவையேயில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,088.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.