கொரோனா நுண்ணுயிரி உடலை எப்படி தாக்குகிறது? நமது உடலின் செல்களில் நுழையும் கொரோனா நுண்ணுயிரிகள், நமது உடல்செல்களை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, அதன் கட்டுப்பாட்டில் நமது உடல்செல்களைக் கொண்டு வரும். கொரோனாவிற்கு தனிப்பட்;ட சிறப்பான மருந்துக்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும், கொரோனா குணப்படுத்தப் படுகிறது என்பேதே உண்மை. 15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: முதலாவதாக கொரோனா நுண்ணுயிரி, சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது கொரோனா நுண்ணுயிரி பரவியுள்ள ஒரு பொருளை, அல்லது கொரோனா நுண்ணுயிரி பரவியுள்ள இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த கொரோனா உடலில் நுழைகிறது. தொண்டை அருகே உள்ள செல்களில் அது முதலில் தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவற்றை கொரோனா நுண்ணுயிரி உற்பத்தி தொழிற்சாலைகளாக மாற்றும். அது பெரும் எண்ணிக்கையில் புதிய கொரோனாக்களை உருவாக்கி உடலில் செலுத்தி, நமது உடலின் அதிக செல்களில் தொற்று ஏற்படுத்தும். தொடக்க கட்டத்தில் நாம் கொரோனா பாதிப்பை அறியமாட்டோம். சிலருக்கு ஒருபோதும் அறிகுறிகள் தோன்றாது. நோயாக உருவாகும் காலம், அதாவது தொற்று ஏற்பட்டு அதன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம், ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் சராசரியாக இது ஐந்து நாட்கள் என்ற அளவில் உள்ளதாக அறியமுடிகிறது. கொரானா நுண்ணுயிரி தொற்று பரவிய 10 பேரில் எட்டு பேருக்கு நோய் லேசான பாதிப்பாக அமையும். காய்ச்சலும், இருமலும் தான் இதற்கான முதன்மை அறிகுறிகளாக உள்ளன. காய்ச்சலும், அசௌகரியமாக உணர்தலும், கொரோனா தொற்று பரவியதற்கு எதிராக நமது உடலில் உருவான எதிர்ப்பாற்றலின் செயல்பாட்டால் ஏற்படக் கூடியவை. உடலின் மற்ற செல்கள், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என உணர்ந்து சைட்டோகின்ஸ் என்ற வேதியியலை உற்பத்தி செய்யும். இவை தான் நோய் எதிர்ப்பாற்றலாக செயல்படும். ஆனால் உடல் வலி, காய்ச்சலையும் ஏற்படுத்தும். கொரோனா தொற்று இருமல் தொடக்கத்தில் வறட்டு இருமலாக இருக்கும் பின்னர் கொரோhன தொற்று விரிவாகப் பரவும்போது, செல்களில் எரிச்சல் தோன்றும். சிலருக்கு இருமலின் போது கெட்டியான சளி வெளியாகும். கொரோனாவல் கொல்லப்பட்ட நுரையீரல் செல்களின் கெட்டியான சளியாக அது இருக்கும். படுக்கையில் கிடந்து ஓய்வெடுத்தல், நிறைய பானங்கள் குடித்தல் மற்றும் சாதாரண காய்சல், மற்றும் மலேரிய காய்ச்சலுக்கு வழங்கும் மருந்துகள் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சை முறை எதுவும் தேவையில்லை என்று தெரிவிக்கின்றார்கள். இந்த நிலை சுமார் ஒரு கிழமைக்கு இருக்கும். இதிலேயே பெரும்பாலானோர் குணமாகிவிடுவதாகத் தெரியவருகிறது கொரோனா நுண்ணுயிரியை எதிர்த்து நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றல் போராடும் காரணத்தால் இது சாத்தியமாகிறது. இருந்தபோதிலும், சிலருக்கு தீவிர நுண்ணுயிரி தொற்று பாதிப்பு ஏற்படும். அந்த நிலையில், மூக்கு ஒழுகுதல் போன்ற தீவிர சளி அறிகுறிகளும் ஏற்படலாம் என்றும் ஆய்வுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நுண்ணுயிரி பாதிப்புக்கு எதிராக நமது உடல் தடுப்பாற்றல் உக்கிரமாக செயல்படும்போது, இது நோயாக உருவாகும். உடலின் மற்ற பகுதிகளில் அழற்சியை ஏற்படுத்த இது வேதியியல் சமிக்ஞைகளை அனுப்பும். ஆனால் இதை கவனமாக சமநிலைப்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான அழற்சி ஏற்பட்டால் உடல் முழுக்க பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம். நமது உடல் தடுப்பாற்றல் மீது எதிர்வினை செயல்பாட்டில் சமநிலையற்ற தன்மையை இந்த நுண்ணுயிரி ஏற்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக உடல் அழற்சி இருக்கிறது. இதை எப்படி செய்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை என்று பெரும்பாலான மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர். நமது வாயில் இருந்து, மூச்சுக் குழாய் வழியாகச் சென்று, நுரையீரலின் சிறிய குழல்களில் கொரோனா நுண்ணுயிரிகள் செல்ல முடியும் என்றால், நுண்ணிய காற்று அறைகளில் அதனால் போய் அமர்ந்து கொள்ள முடியும். அங்கு தான் ரத்தத்திற்கு உயிர்வளி செல்வதும், கரியமிலவளி நீக்கப்படுவதும் நடக்கிறது. இந்த அறைகளில் தண்ணீர் கோர்த்துக் கொண்டு, சுவாச இடைவெளி குறைந்து, சுவாசிப்பது சிரமம் ஆகும். சிலருக்கு சுவாசிக்க சுவாசமூட்டும் சாதனம் தேவைப்படும். சீனாவில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி பார்த்தால், 14 விழுக்காட்டு பேர்களுக்கு இந்த நிலை வரை பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 6 விழுக்காட்டு பேர்களுக்க சிக்கலான நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் உடல் செயல்பாட்டை இழக்கிறது, இதுவே மரணம் ஏற்படவும் காரணமாக உள்ளது. நோய்த் தடுப்பாற்றல் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு, உடல் முழுக்க பாதிப்பை ஏற்படுத்துவது தான் பிரச்சினை. ரத்த அழுத்தம் அபாயகரமான அளவுக்கு குறையும்போது உடல் உறுப்புகள் செயல்பாடு குறையும் அல்லது முழுமையாக நின்றுவிடும். நுரையீரலில் பரவலான அழற்சி ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்படும்போது, உயிர்வாழ்வதற்குத் தேவையான உயிர்வளி அளிப்பதை நுரையீரல் நிறுத்துவிடுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் சிறுநீரகங்களை அது தடுக்கக் கூடும். நமது குடல்களும் பாதிக்கப்படலாம். என்று சில மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆக கொரோனா நுண்ணுயிரியை நோய்த் தடுப்பாற்றலால் அடக்கியாள முடியாமல் போனால், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொரோனா நுண்ணுயிரி பரவி, இன்னும் அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் உடலின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். எக்மோ உள்ளிட்ட சிகிச்சைகள் அதில் அடங்கும். எக்மோ அல்லது பிரித்தேற்ற சவ்வு உயிர்வளியேற்றம் எனப்படுவது நவீன கருவியின் மூலம் அதி உயர் சிகிச்சை அளிப்பதாகும். தீவிர மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் மற்றும் இதயம் முழுமையாக செயல்படாதபோது, எக்மோ கருவியின் உதவி மூலம் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, உயிர்வளி நுரையீரலுக்கு அனுப்பப்படும். இதனால் மூச்சு விடுதல் மற்றும் இரத்த ஓட்டம் தடை படுவது நிறுத்தப்பட்டு நோயாளி விரைவில் காப்பாற்றப்படுவார். தடிமனான குழாய்களில் ரத்தத்தை வெளியில் எடுத்து, ஆகஉடலில் செலுத்தக் கூடிய செயற்கை நுரையீரல் இது. மொத்தத்தில் கொரோனாவிற்கு தனிப்பட்;ட சிறப்பான மருந்துக்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும், கொரோனா குணப்படுத்தப் படுகிறது என்பேதே உண்மை.
உடல் வலிகள், தொண்டை வறட்சி, தலைவலியும் கூட வரலாம். ஆனால் இவை வந்தாக வேண்டும் என்றும் கிடையாது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



