Show all

காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க வேண்டும்! மளிகை, காய்கறி, பெட்ரோலுக்கு நேரக்கட்டுப்பாடு

இனி, மளிகை கடைகள், காய்கறி கடைகள் பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்கும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது போல் பெட்ரோல் நிலையங்களும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவுவதில் தமிழகம் முதற்கட்டத்தில் அதாவது அயல்பரவல் நிலையில் மட்டுமே உள்ளது. அவை சமூகப்பரவல் என்கிற இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது.

மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் கட்டுப்படுத்த முடியும். அனைத்து துறைகள் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கட்டாயத் தேவை இன்றி மக்கள் வெளியே வர வேண்டாம். சமூகப்பரவல் தொற்று வளராமல் காக்க மக்களின் இந்த ஒத்துழைப்பு முதன்மைத் தேவையாகும். ஓமந்தூரார் மருத்துவமனை, கோவை தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. சளி, இருமல் காய்ச்சல் இருந்தால் நலங்குத்துறையை தொடர்பு கொள்ள வேண்டும். 

மக்களின் வசதிக்காக 12 அரசு ஆய்வகங்கள், 2 தனியார் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பப்பணியாளர்களையும்;; உடனடியாக நியமிக்க உத்தரவிட்டுள்ள தகவலையும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.