நமது புவியானது இன்றைக்கு பூசம் நாள் மீனில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பூசம் என்பது எட்டாவது நாள்மீன். இந்த நாள் குழந்தைமை, பேறு, ஒளி என்கிற பொருள்களைக் குறிப்பதாய் அமைவதால் தமிழரால் குறிஞ்சித் தெய்வம், விசும்பு ஆற்றல் சேயோன் எனப்பட்ட முருகனுக்கு விழாவாக உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் விழா முன்னெடுக்கப்படுகிறது. 25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மொழியியல், நான்மறை என்கிற மருத்துவம் (மறைத்துவம்), ஐந்திரம் என்கிற முன்னேற்றக் கலைகள் என முத்துறைகளில் வல்லவர்களாக இருந்த நமது தமிழ் முன்னோர்- ஞாயிற்றுக் கோளை சுற்றி, நமது புவி சுழன்று வரும் பாதையை 27 சம பாகங்களாகப் பிரித்து அதற்கு பெயரிட்டிருக்கின்றனர். அந்தப் பெயரானது- அந்தப் பகுதியில் ஒளிர்ந்து கொண்டிருக்கிற, ஒரே இடத்தில் தனக்குத் தானே சுழன்று கொண்டிருக்கிற, நாள் மீன்களுக்கு தமிழர் இட்ட பெயரேயாகும். அவைகள்:- நமது புவியானது இன்றைக்கு பூசம் நாள் மீனில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பூசம் என்பது எட்டாவது நாள்மீன். இந்த நாள் குழந்தைமை, பேறு, ஒளி என்கிற பொருள்களைக் குறிப்பதாய் அமைவதால் தமிழரால் குறிஞ்சித் தெய்வம், விசும்பு ஆற்றல் சேயோன் எனப்பட்ட முருகனுக்கு விழாவாக உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் விழா முன்னெடுக்கப்படுகிறது. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் தைமாதத்தில் முழுநிலா நாளில் வருகிற தைக்-காற்குளம்-நாள்மீனில் பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிற்காலங்களில் இந்த விழா முன்னெடுக்கப்படுவதற்கான காரணங்கள் பலவகையாகத் திரிந்துள்ளன. பழனி முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை ஒன்பது வீரிய மருந்துகளால் செய்து நிறுவியுள்ளார். இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முதன்மை விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் நோன்பு இருந்து காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு. அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள். கடலூர் மாவட்டம், வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான அவையில் அதி காலை தீஆற்றல் வடிவமான ஒளிக்காட்சி நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள். தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புதிர் எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான நாளாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் தூய்மை செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று ஞாயிறை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனைக் குடும்பத்தலைவி பெற்று, அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர். மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ் பெற்ற கோயிலாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் கோயில்களில் மிக முதன்மையானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது. இது ஒரு மலைக்கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலான மலை இது. வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் கோயில்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள அருளமிகு முருகன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது . சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பால்குளிப்பிப்பு நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். முருகனுக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு. ஆஸ்திரேலியாவில்: இலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில், தைப்பூசம் விழா முன்னெடுக்கப்படுகிறது. முருகனுக்கு குளிப்பிப்பு, தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முதன்மை நிகழ்வுகள். பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். படையல் மற்றும் அன்னதானம் என்று எல்லாம் உண்டு.
1. புரவி அஸ்வினி
2. அடுப்பு பரணி
3. ஆரல் கார்த்திகை
4. சகடு ரோகிணி
5. மான்றலை மிருகசீரிடம்
6. மூதிரை திருவாதிரை
7. கழை புனர்பூசம்
8. காற்குளம் பூசம்
9. கட்செவி ஆயில்யம்
10. கொடுநுகம் மகம்
11. கணை பூரம்
12. உத்தரம் உத்தரம்
13. கை அஸ்தம்
14. அறுவை சித்திரை
15. விளக்கு சுவாதி
16. முறம் விசாகம்
17. பனை அனுஷம்
18. துளங்கொளி கேட்டை
19. குருகு மூலம்
20. உடைகுளம் பூராடம்
21. கடைக் குளம் உத்திராடம்
22. முக்கோல் திருவோணம்
23. காக்கை அவிட்டம்
24. செக்கு சதயம்
25. நாழி பூரட்டாதி
26. முரசு உத்திரட்டாதி
27. தோணி ரேவதி. என்பனவாகும்.
சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
தீர்த்தக் காவடி - கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
மயில் காவடி - மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



