Show all

யாருக்குத் தெரியும்? வீட்டுச் சிறையில் இருக்கும் மெஹ்பூபா முப்திக்கு இனி சப்பாத்தியும் கிடைக்காமல் போகலாம்! மகள் கொடுத்த துப்பு

அம்மாவுக்கு ஒரு கடிதம் எப்படி அனுப்புவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பாட்டியின் அறிவுரைப்படி, என் அம்மாவிடம் பேச விரும்பியதை மிகச் சிறிய கடிதத்தில் எழுதி, அதைச் சப்பாத்திக்குள் வைத்து வெளியில் தெரியாதபடி சுருட்டி மிகவும் கவனமாக அனுப்பி வைத்தேன் எனக் கூறியிருப்பதுடன் காஷ்மீரின் நிலை குறித்து கீச்சுப் பதிவில் தெரிவித்து வருந்தியுள்ளார் மகள் இல்டிஜா முப்தி.

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஷ்மீரில் வீட்டுச்சிறையில் இருக்கும் அம்மாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் அம்மாவுக்கு கடிதத்தை சப்பாத்திக்குள் வைத்து அனுப்பினேன் என்கிறார் மெஹ்பூபா முப்தியின் மகள் இல்டிஜா. இதுவே நடுவண் பாஜக அரசுக்கு கிடைத்த துப்பாகவும் அமையக்கூடிய வாய்ப்பும் இருப்பதால் இனி அவருக்கு சப்பாத்தியும் கிடைக்குமா என்ற பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.

வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் தாய் மெஹ்பூபா முப்தியிடம் தொடர்புகொண்டதைக் குறித்தும் காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்தும் கீச்சு பதிவிட்டிருக்கிறார் மெஹ்பூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி.

நாளது 20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (05.08.2019) ஓர் அறிவிப்பை வெளியிட்டது நடுவண் பாஜக அரசு. இதுநாள் வரை ஜம்மு-காஷ்மீருக்கு பெற்று வந்த சிறப்புத் தகுதி நீக்கப்படுவதாகவும் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், இனி காஷ்மீர் மற்றும் லடாக் என இரு ஒன்றியப் பகுதிகளாகச் செயல்படும் என்பதாகும் அந்த அறிவிப்பு. மண்ணின் உரிமை பிடுக்கப்பட்ட அந்த அறிவிப்பை யொட்டி, அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். வீட்டுச்சிறை வைக்கப்பட்டு நேற்றுடன் 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் அவர்கள் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் எந்தக் கேள்வியுமின்றி ஒருவரைச் சிறையில் அடைக்கலாம்.

காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான மெஹ்பூபா முப்தி, உமர் அப்துல்லா, மற்றொரு அரசியல் தலைவரான அலி முகமது சாஹர் மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் சர்தாஷ் மத்னி ஆகியோர் பாஜகவின் அறிவிப்புக்கு போராட்டமோ வேறு எந்த வகையான முன்னெடுப்பும் செய்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா தழுவி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் பெற்று வந்த சிறப்புத் தகுதி நீக்க அறிவிப்பு மற்றும் இந்தியாவின் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இந்திய அரசாங்கத்தை விமர்சித்திருந்த காரணம் பற்றி மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த பனைஎண்ணெய்யை நிறுத்தி விட்டது ஒன்றிய பாஜக அரசு. இதனால், தமிழகத்தில் குடும்ப அட்டைக்கு கடை விற்பனை விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் பனைஎண்ணெய்யைக் கொடுத்துக் கொண்டிருந்தது தமிழக அரசு. தற்போது குடும்ப அடையாள அட்டைக்கு அந்த வாய்ப்பு இல்லவேயில்லை. வெளிநாட்டுத் தலைவர்களுக்கே இந்த கதி.

வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது தாயை பிரிந்த வேதனையை கீச்சுவில் பகிர்ந்துகொண்டுள்ளார் அவரது மகள் இல்டிஜா முப்தி. மெஹ்பூபாவின் கீச்சுக் கணக்கில் பதிவிட்டுள்ள இல்டிஜா, சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட இந்த ஆறு மாதத்தில் காஷ்மீரின் நிலை குறித்துக் கூற வார்த்தைகளே இல்லை. 

அம்மாவுக்கு ஒரு கடிதம் எப்படி அனுப்புவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பாட்டியின் அறிவுரைப்படி, என் அம்மாவிடம் பேச விரும்பியதை மிகச் சிறிய கடிதத்தில் எழுதி, அதைச் சப்பாத்திக்குள் வைத்து வெளியில் தெரியாதபடி சுருட்டி மிகவும் கவனமாக அனுப்பி வைத்தேன் எனக் கூறியிருப்பதுடன் காஷ்மீரின் நிலை குறித்து கீச்சுப் பதிவில் தெரிவித்து வருந்தியுள்ளார் மகள் இல்டிஜா முப்தி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.