அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் 4 நாட்களாக நீடித்த இழுபறிக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 22,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பெனிசில்வேனியா மாநிலத்தில் 20 பேராளர்களை பெற்ற நிலையில் அமெரிக்காவின் 46வது அதிபராகிறார் ஜோ பைடன்! கடந்த 3 நாட்களாக வாக்கு எண்ணிக்கை தொடர்ந்த நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 538 பேராளர்களுக்கான தேர்தலில் பிடென் 253 பேராளர்களையும், டிரம்ப் 213 பேராளர்களையும்; பெற்றிருந்தனர். பெரும்பான்மைக்கு 270 பேராளர்கள் தேவை என்பதால், பிடெனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில், பென்சில்வேனியாவில் 99விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஜோ பைடன் 29,000 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 284 பேராளர்களுடன் அமெரிக்காவில் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்வாகிறார். பென்சில்வேனியா மாகாணத்தில் பைடன் சிறப்பான வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் 4 நாட்களாக நீடித்த இழுபறிக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதே போல், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வாகிறார். சென்னையை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகிறார்.
அமெரிக்காவில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடெனும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருப்பதால், வழக்கத்துக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் கடும் தாமதம் ஏற்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



