Show all

தூய்மையிலா பானிபூரி! சொந்த மண்ணிலேயே இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறவர்கள், வந்த மண்ணில் என்ன செய்ய மாட்டார்கள்

பானிபூரி தயாரிப்புக்கு கழிவறைக்கு பயன்படுத்தும் பாதுகாப்பற்ற நீரைப் பயன்படுத்திய அவலம். சொந்த மண்ணிலேயே இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறவர்கள், வந்த மண்ணில் என்ன செய்ய மாட்டார்கள் என்று, இந்த செய்தியால் தமிழகத்தில் பானிபூரி ஆர்வலர்கள் புலம்புகிறார்கள்.

22,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பானி பூரி பலரின் விருப்பத் தேடலாக அமைந்து விட்ட உணவாகி வருகிறது. ஆனால், பல்வேறு கடைகளில், அந்த உணவை தூய்மையற்ற முறையில், தயாரிக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டும் வளர்ந்தே வருகிறது.

இந்நிலையில், மும்பை கோல்காபூரில் உள்ள ரன்கலா ஏரிக்கு அருகில், பானி பூரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதுவது வழக்கம். 

இவ்வாறு இருக்க, அந்த கடையின் ஊழியர், பானி பூரியின் தண்ணீரில், கழிவறையில் உள்ள நீரை கலந்துள்ளார். இந்த முன்னெடுப்பு அங்கிருந்த கண்காணிப்பு படக்கருவியில் பதிவாகிய நிலையில், இதுதொடர்பான காணொளியும் இணையத்தில் தீயாகி பரவியது.

இதனைப் பார்த்த வாடிக்கையாளர்கள், அக்கடையில் பெரும் சண்டையில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த பொருட்களையும், எடுத்துத் தெருவில் வீசினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.