Show all

ஆவிபறக்கும் இட்லி விவாதம்! வெதுவெதுப்பில் சமூக வலைத்தளம்

பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இட்டவியை ‘சலிப்புமிக்கது’ என்று கீச்சுவில் குறிப்பிட்ட நிகழ்வு மிகப் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.

23,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இட்டவியின் பெருமையை உணர்ந்த உலக நலங்கு அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுகளின் பட்டியலில் இட்டவிக்கு மிக முதன்மை இடத்தை அளித்துள்ளது. அதன்படி, கடந்த கடந்த மூன்று ஆண்டுகளாக உலக இட்டவி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த முதியோர் வரை எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற உணவு, இட்டவி. நோயாளிகளும், உணவுக் கட்டுப்பாட்டில்  இருப்பவர்களுக்கும் மிருதுவான இட்டவி மீது எப்போதுமே தனி ஈர்ப்பு உண்டு. வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் இட்டவியையே விரும்பி உண்கின்றனர். 

தமிழ் எண்கள் உலகினரைச் சென்றடைந்து, இன்று உலக எண்களாக உலா வருவதைப் போலவே, நமது இட்டவியும், இந்தோனேசியா வரை சென்று கெட்லி என்று போற்றிக் கொள்ளப்பட்டு, தற்போது  இட்லி என மருவி  இட்டவி இட்லியாக வழக்கில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

வயிற்றிற்கு எந்த செய்கூலியும், சேதாரமும் தராத உணவு என்பதாலேயே இட்டவியை எல்லாரும் விரும்பி உண்கின்றனர். உடம்பு சரியில்லை என மருத்துவரிடம் சென்றால் கூட நோயாளிக்கு அவர் பரிந்துரைக்கும் உணவு பட்டியலில் இட்டவிக்கு தான் முதலிடம்.

ஆரியர் வருகைக்குப் பின்பு, தமிழக  மக்கள்- குழந்தைகளுக்கு கொடுக்க இட்டவியிலிருந்து ஆரியக் கூழுக்கு மாறிய போதுதான், 'கேப்பையில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்பவருக்கு மதி எங்கே போயிற்று” என்கிற பழமொழி எழுந்தது. ஆரியத்திற்கு கேழ்வரகு என்ற ஒரு பெயரும் உண்டு. தமிழுக்குரிய சிறப்பெழுத்தான ழகரம் பயின்று வருவதால், (கே ‘ழ்’ வரகு) ஆரியம் தமிழர் உணவோ என்று மயங்குவர். வரகு என்பது தமிழர் உணவு. கேழ்வரகு என்றால் வரகு போன்றது என்று பொருள்.

இட்டவிக்கு பயன் படுகிற உழுந்தும், நெல்லும் தமிழர்தம் வீர உணவுகள். ஒளவை, 'நெற்பயிர் விளை” தமிழர்களுக்கு வீரமாக கட்டளையிடுவார். 

உலக இட்டவி நாளுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிற நிலையில், இட்டவியைத் தவறாக பேசுவதா என்கிற ஆவிபறக்கும் விவாதம் இணையத்தை வெதுவெதுப்பாக்கியுள்ளது. 

பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இட்டவியை ‘சலிப்புமிக்கது’ என்று கீச்சுவில் குறிப்பிட்ட நிகழ்வு மிகப் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.

“இட்டவிதான் உலகில் மிகவும் சலிப்பான பாடு” என்று பிரிட்டனை சேர்ந்த வரலாற்றாசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் கீச்சுவில் பதிவிட்டிருந்தார்.
எழுத்தாளரான விர் சங்வி கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார். தமிழகத்தை பூர்விகமாக கொண்டவரும், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளருமான ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ், விடுமுறை காலத்தில் தான் சென்னைக்கு வரும்போது தனது அம்மா “இட்டவி மீதான தனது காதலை” வெளிப்படுத்தியதை நினைவுகூர்ந்துள்ளார்.

செயலலிதா முன்னெடுத்த அம்மா உணவகத்திலும், இட்லி குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

“மக்கள் இதை ஏன் மிகவும் விரும்புகிறார்கள் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்று நீங்கள் நினைக்கும் உணவு எது என்று இந்திய உணவு விநியோக நிறுவனமொன்று கேட்ட கேள்விக்கே பிரிட்டனின் நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக பணிபுரியும் ஆண்டர்சன் பதிலளித்திருந்தார்.

ஆனால், தனது கருத்துக்கு இட்டவி விரும்பிகளிடமிருந்து இவ்வளவு எதிர்ப்புகள் வந்து குவியுமென்று ஆண்டர்சன் எதிர்பார்க்கவில்லை.

குறிப்பாக, எழுத்தாளரான இஷான் தரூர், ஆண்டர்சனின் கருத்தை கீச்சுவில் விமர்சித்திருந்தார்.

இதையடுத்து களத்தில் குதித்த இசானின் தந்தையும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர், இட்லி உண்பதற்கான சிறந்த வழியையும் பரிந்துரைத்தார்.

மேலும், பலர் தங்களுக்கு விருப்பமான உணவை தவறாக விமர்சிக்கப்படுவதை பார்த்து கீச்சுவில் சீற்றப் பதிவிட்டனர்.

இருப்பினும், தனது கருத்திலிருந்து பேராசிரியர் ஆண்டர்சன் பின்வாங்கவில்லை. கீச்சுவில் எழுந்த விமர்சனங்களுக்கு பிறகு தான் மதிய வேளைக்கு இட்டவியை வாங்கி சாப்பிட்டதாகவும், அதன் பிறகும் தனது கருத்தை மாற்ற விரும்பவில்லை என்றும் ஆண்டர்சன் கூறுகிறார்.

இட்டவியை விட்டுக்கொடுக்க விரும்பாத பலர், காலையில் சரியான வகையில் இட்லியை உண்பது குறித்து ஆண்டர்சனுக்கு பாடம் எடுத்தனர். அதாவது, வாழை இலையில் சூடான இட்லியை மிளகாய்ப்பொடி, தேங்காய் சட்னி மற்றும் சாம்பாரை தொட்டு சாப்பிடுமாறு அவருக்கு அறிவுறுத்தினர்.

இந்த நிலையில், இட்லி குறித்த தனது கருத்தால் எழுந்துள்ள விவாதமானது, ஒரு உணவு என்பது எவ்வாறு மக்களின் அடையாளத்தையும், இனப் பெருமையையும் வெளிப்படுத்துவது மட்டுமின்றி உணர்ச்சிபூர்வமான வகையில் அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்பதையும் வெளிக்காட்டுவதாக பேராசிரியர் ஆண்டர்சன் கூறுகிறார்.

“என் கருத்துக்கு உடன்பட்டும், உடன்படாமலும் வந்த பெரும்பாலான பதில்களில் பலரும் தாங்கள் சிறுஅகவையிலிருந்து இட்லியை குடும்பத்தினருடன் வீட்டிலும், கடைகளிலும் உண்டு வளர்ந்ததை விளக்கி இருந்தனர். எனக்கு பதிலளித்தவர்களில் ஏராளமானோர் தென் இந்தியாவையோ அல்லது புலம்பெயர்ந்த தென் இந்தியர்களாகவோ இருந்தனர். பூர்விகத்துடனான பிரிக்க முடியாத பிணைப்பை உணவு கொண்டிருப்பதை அவர்களது கருத்துகள் வெளிப்படுத்தின.”

“பலர் வேடிக்கையான பதில்களை அளித்தாலும், அவற்றில் சில அறிவுப்பாடகவும் இருந்தன” என்று பேராசிரியர் ஆண்டர்சன் மேலும் கூறுகிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.