தன்னை யாரும் கடத்தவில்லை. சொந்த விருப்பத்தின் பேரிலேயே பிரபுவுடன் திருமணத்திற்கு உடன்பட்டேன் என்று சவுந்தர்யா தன்னிலை விளக்கம் அளித்ததனாலும், அவர் பதினெட்டு அகவை நிறைந்தவர் என்பதாலும் அவருடைய சொந்த விருப்பதில் நடந்த திருமணம் செல்லும் என்று அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. 22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தன்னை யாரும் கடத்தவில்லை. சொந்த விருப்பத்தின் பேரிலேயே பிரபுவுடன் திருமணத்திற்கு உடன்பட்டேன் என்று சவுந்தர்யா தன்னிலை விளக்கம் அளித்தார். இதையடுத்து, காதல் கணவர் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபுவுடன் செல்ல சவுந்தர்யாவுக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்தது. சவுந்தர்யாவின் தந்தை சாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவின்மீதே அறங்கூற்றுமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. அதிமுகவின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபுவும், சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியும் நான்கு நாட்களுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணமும் செய்து கொண்டார். ஆனால், இந்தத் திருமணத்துக்கு சவுந்தர்யா குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. சவுந்தர்யாவின் அப்பா சுவாமிநாதன், பிரபு- சவுந்தர்யா திருமணத்தை மறுப்பதற்கான காரணமாக
1. பிரபுவுக்கு எங்கள் குடும்பத்தோடு 13 ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கம், அவர் எங்க வீட்டுக்கு மகன் மாதிரி அடிக்கடி வந்து போவார்.
2. என் பொண்ணுக்கு இப்போதான் 19 அகவை ஆகுது. பிரபுக்கு 39 அகவை ஆகிறது. 10 ஆண்டுகளாக என் பொண்ணை காதலிப்பதாகச் சொல்றார். அப்படின்னா 9 அகவையிலேயே என் பொண்ணை காதலித்தாரா?
3. இருவருக்குமான இருபது அகவை வேறுபாட்டை எப்படி ஏத்துக்கறது?
4. நான் சாதி பார்க்கிறவன் இல்லை. மதம் பார்க்கிறவன் இல்லை. காதலுக்கும் நான் எதிரி கிடையாது. ஆனால், 20 அகவை அதிகமானவருக்கு எப்படி என் பொண்ணை தர்றது?
5. என் பொண்ணை சின்ன அகவையிலே இருந்து தூக்கி வளர்த்தவர். இதான் செரிக்க முடியல.
என்பதான காரணங்களைத் தெரிவித்து ஆட்கொணர்வு மனு பதிகை செய்திருந்த சௌந்தர்யா அப்பா வாதாடியிருந்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



