Show all

அள்ளலாம் வாங்க! பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விழாக்கால சலுகை விலை விற்பனையை அறிவித்திருக்கின்றன

அடுத்த மாதத்தில் தீபாவளி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு பிளிப்கார்ட் மற்றும்  அமேசான் ஆகிய இரண்டு பெரிய இயங்கலை வணிக நிறுவனங்களும் சலுகை விலை விற்பனையை அறிவித்திருக்கின்றன.

24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த மாதத்தில் தீபாவளி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு பிளிப்கார்ட் மற்றும்  அமேசான் ஆகிய இரண்டு பெரிய இயங்கலை வணிக நிறுவனங்களும் சலுகை விலை விற்பனையை அறிவித்திருக்கின்றன.

பிளிப்கார்ட்தான் முதலில் விழாக்கால விற்பனை சலுகை குறித்த அறிவிப்பை வெளியிட்டு தொலைக்காட்சிகளில் மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்தியது.  அதனைத் தொடர்ந்து அமேசானும் தனது விழாக்கால விற்பனை சலுகை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இரண்டு நிறுவனங்களுமே பலவிதமான சலுகைகளை கொண்டிருக்கின்றன. பிளிப்கார்ட் ‘பிக் பில்லியன் விற்பனை’ என்ற தலைப்பில் நாளது 30,புரட்டாசி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) அன்று தனது சலுகை விலை வணிகத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனை நாளது 5,ஐப்பசி புதன்கிழமை (அக்டோபர் 21) அன்று முடித்துக் கொள்ளப் படுமாம். 
அமேசான் ‘கிரேட் இந்தியன் விற்பனை’ என்ற தலைப்பில் நாளது 01,ஐப்பசி சனிக்கிழமை  (அக்டோபர் 17) அன்று தனது சலுகை விலை வணிகத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனை முடிவு நாள் அறிவிக்கப்படவில்லை. அமேசான் சலுகை விற்பனை ஒரு மாதத்திற்கு தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது. 

மின்னணுப் பொருட்களில் தொடங்கி மளிகை பொருட்கள் வரை கொரோனா தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து பொதுமக்கள் வெளியே சென்று வாங்குவதற்குப் பதிலாக வீட்டில் இருந்தே கேட்பு அனுப்பி வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்டுதோறும் பிக் பில்லியன் நாட்கள் என்ற தலைப்பில் சலுகை வணிகத்தை அறிவிப்பது வழக்கம். தவணைக்கடன் பரிவர்த்தனைகள் உட்பட பல்வேறு சலுகைகளோடு கூடிய விற்பனையை அமேசான் அறிவிக்கிறது. அமேசான் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் கூட்டு சேர்ந்து தவணைக்கடன் பரிவர்த்தனைகள் உட்பட அனைத்து கடன் ஆதாய அட்டைப் பரிவர்த்தனைகளுக்கும் 10விழுக்காடு உடனடி தள்ளுபடியை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.