Show all

ஓ! சாலையில் நெரிசலைக் காட்டுவதற்கு கூகுள் வரைபடச் செயலி தரவுகளைத் திரட்டுவது இப்படித்தானா?

பெர்லின் நகரத் தெரு ஒன்று, வண்டிகள் பெரிதாக இயங்காமல், காலியாக காலியாக கிடந்த நிலையில், அந்தத் தெருவில் கூகுள் வரைபடத்தின் மூலம் பயணித்த பயணிகள் சிலருக்கு போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூகுள் வரைபடம் தகவல் தெரிவித்தது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. எப்படி நிகழ்ந்தது இது?

21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெர்லின் நகரத் தெரு ஒன்று, வண்டிகள் பெரிதாக இயங்காமல், காலியாக காலியாக கிடந்த நிலையில், அந்தத் தெருவில் கூகுள் வரைபடத்தின் மூலம் பயணித்த பயணிகள் சிலருக்கு போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூகுள் வரைபடம் தகவல் தெரிவித்தது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

அவர்கள் ஏன் இப்படி என்று, விசாரணைக்கு களமிறங்கிய போதுதான் கூகுள் வரைபடச் செயலியைக் குழப்பியது ஜெர்மானியர் ஒருவரின் குறும்பு என்று தெரியவந்தது.

தொன்னூற்று ஒன்பது மிடுக்குப் பேசிகளில், ஒரே நேரத்தில் கூகுள்வரைபடச்  செயலியை திறந்த ஜெர்மானியர் ஒருவர், எல்லா மிடுக்;குப் பேசிகளையும், ஒரு தள்ளுவண்டியில் ஒன்றாக வைத்து, பெர்லின் நகர வீதிகளில் அதை இழுத்து செல்ல ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்த கண்கட்டு வித்தையின் காரணமாக, ஒரே நேரத்தில், 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து, உண்மையில் காலியாக கிடந்த பெர்லின் வீதிகள் அனைத்திலும், போக்குவரத்து நெரிசலை குறிக்கும் சிவப்பு வரிகள், கூகுள் வரைபடத்தில் தோன்றின. என்பது தெரியவந்தது.

ஓ! சாலையில் நெரிசலைக் காட்டுவதற்கு கூகுள் வரைபடச் செயலி தரவுகளை திரட்டுவது, அருகில் பயணிக்கும் செல்பேசிகளைக் கொண்டே என்பதை, இந்தக் குறும்பு செயலும்- அதன் விளைவும் நமக்கு அறிவுறுத்துகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.