பணமுடையில்லாத நிருவாகத் திறமை பாஜகவிடம் இல்லை என்பது கடந்த முறை ஆட்சியின் போதே நிருபிக்கபட்ட உண்மையாகும். ஆனாலும் இந்த முறையும் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிற நிலையில்- இந்தியாவின் பணமுடையை ஈடு செய்ய- அரசுத்துறை பங்குகளை விற்பனை செய்வதில் நடுவண் பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. 21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக குடும்பங்களின் நிருவாகமானது- ஒரு சில குடும்பங்களில் அப்பா கையில் இருக்கும், சில குடும்பங்களில் அம்மா கையில் இருக்கும், சில குடும்பங்களில் பிள்ளைகள் கையில் இருக்கும். இதில் வருமானம் ஈட்டுதல் என்பது அந்த நிருவாகப் பொறுப்புக்கான காரணியாக இருப்பதில்லை. பணமுடை இல்லாத நிருவாகத் திறமைதான் காரணியாக அமைகிறது. பணமுடை இல்லாத நிருவாகத் திறமைக்கு திட்டமிடல், சிக்கனம், காரணமாக அமைகிறது. நாடு என்பது மாதிரி குடும்பம்தான். குடும்பம் என்பது மாதிரி சமுதாயம்தான். நமது குடும்பம் போன்ற நமது சமுதாயமான இந்தியாவில், பாஜக இந்த முறையும் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பணமுடை இல்லாத நிருவாகத் திறமை பாஜகவிடம் இல்லை என்பது கடந்த முறை ஆட்சியின் போதே நிருபிக்கபட்ட உண்மையாகும். ஆனாலும் இந்த முறையும் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது. நிருவாகத் திறமையில்லாமல் பாஜகவிற்கு மக்கள் எப்படி ஓட்டு போட்டார்கள்? பாரபட்சத்திற்காக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். பாரபட்சத்தில் ஆதாயம் பெரும் மக்களிடம், ஹிந்தி, ஹிந்துத்துவாவை முன்னெடுத்தும், பாரபட்சத்தில் ஆதாயம் பெற வாய்ப்பில்லாத மக்களிடம் போலி தேசியவாதத்தை முன்னெடுத்தும் வாக்குகளை அறுவடை செய்து ஆட்சியில் இருக்கிறது, பணமுடை இல்லாத நிருவாகத் திறமையில்லாத பாஜக. ஒரு குடும்பத்தில் பிள்ளைகளுக்கு செல்பேசி, ஊர்சுற்ற, பதின்ம முறைக்கல்வி நடுவண் வாரியக் கல்வி என்று கௌரவக் கல்விக்கு (ஆங்கில வழிக் கல்வி அல்ல- ஆங்கில வழிக்கல்வி அரசுபள்ளியிலும் பெற முடியும்) என்று பணத்தை விரயப்படுத்தி விட்டு, பணமுடையைப் போக்கிட சொத்தை விற்க முன்வருவார்கள். அந்த நடைமுறையை, நமது மாதிரி பெரிய குடும்பமான, இந்திய சமுதாயத்தில் ஆட்சியிலிருக்கும் பாஜக முன்னெடுத்திருக்கிறது. ரூ.90 ஆயிரம் கோடி நிதி திரட்ட, பொது நிறுவனம் என்று சொல்லப்படுகிற, இந்திய அரசின் நிறுவனமான, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பங்குகளை, தனியார்களிடம் விற்று விடுவது என்று, நடப்பு வரவு-செலவு திட்டத்தில் தெரிவித்திருந்தது பாஜக அரசு. ரூ.90 ஆயிரம் கோடி திரட்ட, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பங்கு வெளியிடுவது எப்போது என்பது குறித்து இந்திய நிதித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 100 விழுக்காட்டு பங்குகளும் தற்போது ஒன்றிய அரசின்வசம்தான் உள்ளன. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தாம் ஆயுள் காப்பீட்டுத்துறையில் 70 விழக்காடு சந்தை பங்களிப்பையும் கொண்டுள்ளது. இந்த துறையில் உள்ள ஒரே பொதுத்துறை நிறுவனமும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் மட்டும்தான். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பங்குகளைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு பல்வேறு செயல்முறைகளை பின்பற்ற வேண்டியது இருக்கிறது. சட்ட அமைச்சகத்துடன் கலந்து பேசி சட்ட திருத்தங்களும் செய்ய வேண்டியது உள்ளது. இந்தப் பணிகளை தொடங்கி விட்டோம். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பங்குகளைப் பங்குச்சந்தையில் பட்டியலிடும் நடவடிக்கையானது அடுத்த நிதி ஆண்டின், இரண்டாவது அரையாண்டு காலத்தில் நடைபெறும் என தோன்றுகிறது. எத்தனை விழுக்காடு பங்குகள் விற்பனை செய்யப்படும் என கேட்கிறீர்கள். இது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் 10 விழுக்hகாடு பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என்று இந்திய நிதித்துறை செயலாளர் கூறினார். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பங்குகளைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதின்மூலம் பொதுப்பங்குகளை வெளியிட்டு நடுவண் பாஜக அரசு ரூ.90 ஆயிரம் கோடியை திரட்ட இலக்கு வைத்துள்ளது. மேலும் அரசுத்துறை பங்குகளை விற்பனை செய்வதின் மூலம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி நிதி திரட்ட நடுவண் பாஜக அரசு இலக்கு வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் துணை நிறுவனமான, இந்திய தொழில் வளர்ச்சி வங்கியின் பங்குகளையும் விற்பனை செய்ய நடுவண் பாஜக அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் பாரபட்ச வாத நிருவாகம்- இந்தியாவை முற்றாக முடிப்பதற்கு முன்பாக, இந்திய சான்றோர் பெருமக்களுக்கு- கடுமையான கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டு, விரைவாக இந்தியாவை பாஜகவிடம் மீட்கும் கடப்பாடு முதன்மையாக நிற்கிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்; ஒன்றிய வரவு-செலவுத் திட்டம் பதிகை செய்தபோது, வெளியிட்ட முதன்மையான அறிவிப்புகளில் ஒன்று, காப்பீட்டுத்துறையில் முடிசூடா மன்னனாக திகழ்கிற் இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட ஒன்றிய அரசு முடிவு செய்து உள்ளது என்பதாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



